5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

3 New Criminal Laws: அமலுக்கு வந்த 3 புதிய குற்றவியல் சட்டம்.. வியாபாரி மீது பாய்ந்தது முதல் வழக்கு!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளன. நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது.

3 New Criminal Laws: அமலுக்கு வந்த 3 புதிய குற்றவியல் சட்டம்..  வியாபாரி மீது பாய்ந்தது முதல் வழக்கு!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Jul 2024 09:34 AM

அமலுக்கு வந்த 3 புதிய குற்றவியல் சட்டம்: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளன. நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த 3 சட்டங்களுக்கான கடும் எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், குற்றவியல் சட்டங்களில் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்குவது, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் சட்டங்களுக்கு பெயரிடுவது, விவாதமின்றி மாநில அரசுகளின் கருத்தை கேட்காமல் சட்டங்களை கொண்டு வருவது போன்றவற்றுக்கு எதிர்ப்பு இருந்தது.

வியாபாரி மீது பாய்ந்தது முதல் வழக்கு: 

இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்ம ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை இன்று அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது இந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கமலா மார்கெட் காவல்நிலையம் இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப்பிரிவு 285-ன் கீழ் டெல்லி ரயில் நிலைய மேம்பாலத்தின் நடைமேடையில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை வைத்திருந்த வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய சட்டங்களின் முக்கிய அம்சங்கள்:

புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களிடம் பெண் போலீஸ் அதிகாரிகள், பாதுகாவலர் அல்லது உறவினர் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அந்த பெண்களிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.

மேலும், குழந்தை விற்பனை கொடி குற்றமாக்கப்பட்டு, 18 வயதுக்குட்பட்ட சிறாரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து தேடல் மற்றும் கைப்பற்றல் நடவடிக்கைகளின் வீடியோ பதிவுகளை கட்டாயமாக்குகிறது. தீவிரவாத செயல்களுக்கான வரையறை வழங்கப்பட்டுள்ளது. கும்பல் கொலை தனி பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எப்ஐஆர் பதியாமலேயே விசாரணை நடத்த 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய 3 சட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கருணை மதிப்பெண் விவகாரம்.. நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு..