Karnataka : வார விடுமுறையை கழிக்க ரிசார்டுக்கு சென்ற 3 இளம் பெண்கள்.. தண்ணீரில் மூழ்கி பலியான சோகம்!
Resort | கர்நாடகா மாநிலம் மங்களூரு புறநகரில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு சொகுசு ரிசார்டு உள்ளது. இந்த சொகுசு ரிசார்டில் வார இறுது நாட்களை கழிப்பதற்காக மைசூர் பகுதியை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் சென்றுள்ளனர். ஆனால் சென்ற இடத்தில் மூன்று பெண்களும் அங்கிருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் வார விடுமுறையை கழிக்க ரிசார்டுக்கு சென்ற மூன்று இளம் பெண்கள், அங்கிருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி பலியோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன கவலையை போக்க ரிசார்டுக்கு சென்ற பெண்கள் பலியான நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடந்தி வருகின்றனர். விசாரணையின் முதற்கட்ட தகவலின்படி, இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்களில் மூவரும் 21 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இந்த மூன்று பெண்கள் யார், அவர்கள் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Crime: உயிரிழந்த நோயாளியின் கண் மாயம்.. கூலாக பதில் சொன்ன மருத்துவமனை!
மன கவலையை போக்க ரிசார்டுக்கு சென்ற பெண்கள்
தற்போதை காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் சோகம், மன கவலை ஒரு முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது. அதீத கவலை மற்றும் சோகம் அவர்களை தவறான வழியில் நடக்கவும், சில சமையம் உயிருக்கு ஆபத்தான செயல்களை செய்யவும் தூண்டுகிறது. மன சோர்வு மற்றும் கவலை ஆபத்தான விலைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவர்களும் கூட இளைஞர்களை மன மகிழ்ச்சியுடன் இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த மூன்று பெண்கள் மன நிம்மதிக்காக வார இறுதியை கொண்டாடும் வகையில் ரிசார்டுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், அந்த மூன்று பெண்களும் அங்கிருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த பெண்கள்
கர்நாடகா மாநிலம் மங்களூரு புறநகரில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு சொகுசு ரிசார்டு உள்ளது. இந்த சொகுசு ரிசார்டில் வார இறுது நாட்களை கழிப்பதற்காக மைசூர் பகுதியை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் சென்றுள்ளனர். ஆனால் சென்ற இடத்தில் மூன்று பெண்களும் அங்கிருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அதாவது, மைசூர் குருஹர பள்ளி பகுதியை சேர்ந்த 21 வயதான கீர்த்தனா, ராமானுஜ சாலை பகுதியை சேர்ந்த 21 வயதான நிஷிதா மற்றும் விஜய் நகர் பகுதியை சேர்ந்த 20 வயதான பார்வதி என்ற மூன்று இளம் பெண்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : விசாரணை வளையத்திற்குள் கஸ்தூரி.. 14 நாட்கள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இளம் பெண்கள் உயிரிழந்தது எப்படி
கர்நாடகா மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்று பெண்களும், பீச் ரிசார்டில் நேற்று அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். அதன்படி, இன்று ரிசார்டுக்கு சென்ற இளம் பெண்கள் நீச்சல் குளத்தில் குளித்துள்ளனர். அப்போது மூவரில் ஒரு இளம் பெண், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக தனது மொபைல் போனை ஆன் செய்துவிட்டு சுமார் 6 அடி நீளம் கொண்ட நீச்சல் குளத்தின் அடிப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண் திடீரென தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற இரண்டு பெண்கள் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
இதையும் படிங்க : Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசால்ட் செய்யுமா..? 5 ஸ்டேடியங்களில் இந்திய அணியின் சாதனை எப்படி?
தீவிர விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
அப்போது மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அந்த பெண்கள் உயிரிழந்தது எப்படி என்பது குறித்த முழு தகவல் எதுவும் தெரிய வரவில்லை. நீச்சல் குளத்தில் இளம் பெண்கள் மூழ்கி உயிரிழந்த சம்பத்தின் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், இளம் பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இளம் பெண்கள் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.