Kerala: கேரளாவில் மாட்டை தேடி காட்டுக்குள் சென்ற பெண்கள்.. கடைசியில் ட்விஸ்ட்!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் காட்டுக்குள் மூன்று பெண்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று நடைபெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் குட்டம்புழா என்ற கிராமம் உள்ளது.

Kerala: கேரளாவில் மாட்டை தேடி காட்டுக்குள் சென்ற பெண்கள்.. கடைசியில் ட்விஸ்ட்!

கோப்பு புகைப்படம்

Published: 

29 Nov 2024 14:08 PM

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் காட்டுக்குள் மூன்று பெண்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று நடைபெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் குட்டம்புழா என்ற கிராமம் உள்ளது. கொச்சியிலிருந்து கிழக்குப் பக்கத்தில் 71 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தை ஒட்டி அத்திக்களம் என்ற வனப்பகுதி அமைந்துள்ளது. இயற்கையாகவே இந்த கிராமம் முழுக்க அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட பகுதியாகும். இந்த காட்டில் யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்த பகுதியில்  பழங்குடி மக்கள் மட்டும் தான் இங்கு வசித்து வருகின்றனர். எப்போது பார்த்தாலும் கேரளாவில் தனித்தீவு போல் காட்சி அளிக்கும் இந்த குட்டம்புழா கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆடு மாடுகளை மேய்ப்பதை தொழிலாக பார்த்து வருகிறார்கள்.

இப்படியான நிலையில் பார் குட்டி, டார்லி மற்றும் மாயா ஜெயன் என்ற 3 பெண்கள் நேற்று மாடு மேய்க்க சென்ற நிலையில் அவர்களின் மாடுகள் திடீரென காணாமல் போயிருக்கிறது. இதனால் பதறிப் போன 3 பெண்களும் பல இடங்களில் தங்களுடைய மாடுகளை தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் ஒருவேளை அத்திக்களம் காட்டிற்குள் சென்றிருக்குமா என நினைத்த அவர்கள் மதியம் 3 மணி அளவில் அந்த காட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

Also Read: Crime: பல்லடம் அருகே பகீர் சம்பவம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை

அதன் பிறகு அந்த மூன்று பேரும் வீடு திருப்பாமல் இருக்கவே சந்தேகம் அடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அத்திக்களம் காட்டுக்குள் சென்ற 3 பெண்களை தேடும் பணி தொடங்கியது. பரந்து விரிந்த அந்த காட்டுக்குள் தேடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதால் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள், வனத்துறை அதிகாரிகள், உள்ளூர் மக்கள் அடங்கிய மிகப்பெரிய குழு உதவியுடன் காவல்துறையினர் இந்த தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலை 2 மணி வரை இந்த குழுவானது நான்கு பக்கமாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது . இதில் இரண்டு குழு மட்டும் பாதியிலேயே காட்டிலிருந்து தேடுதல் பணியை தொடர முடியவில்லை என வெளியே வந்தது. மற்ற இரண்டு குழுக்கள் தீவிரமாக தேடியும் 3 பெண்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் காட்டுக்குள் சென்ற 3 பெண்களில் ஒருவரிடம் இருந்து போன் அவரது குடும்பத்தினருக்கு வந்ததாக கூறப்படுகிறது அந்த செல்போன் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக தொடர்ந்தது. இப்படியான நிலையில் அப்போதும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் விழி பிதுங்கினர்.

Also Read: Crime: யூட்யூப் பார்த்து செயின் பறிப்பு.. சென்னையில் 3 பேர் கைது!

மேலும் அத்திக்களம் காட்டில் யானைகள் இருப்பதால் தேடுதல் பணி எச்சரிக்கையுடன் நடைபெற்றது. வியாழக்கிழமை மதியம் முதல் வெள்ளிக்கிழமை காலை வரை வனத்துறையின் தீவிரமாக தேடுதலை தொடர்ந்த நிலையில் தெர்மல் ஸ்கேனிங் கருவி, ஆளில்லா விமானம்  என எல்லாம் வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தும் அந்த பெண்களை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதற்கிடையில் அடர்ந்த காட்டுக்குள் உள்ள பள்ளத்தாக்கு பாறையில் அந்த 3 பெண்களும் தஞ்சம் அடைந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதாகவும், விரைவில் அவர்களை மீட்டெடுவோம் எனவும் போலீசார் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

இதனிடையே காணாமல் போன 3 பெண்களும் இன்று காலை 7:30 மணிக்கு பத்திரமாக விமானம் மூலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேரும் காட்டுக்குள் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அரக்கமுட்டி என்ற பகுதியில் இருந்ததாகவும் காலை 8 மணியளவில் பெண்களை குட்டம்புழாவிற்கு மீட்பு படையினர் அழைப்பு வந்தனர். மாடுகளை தேடி காட்டுக்குள் சென்று அவர்கள் வழியில் யானையைப் பார்த்ததால் பயந்து போய் வனப்பகுதிக்கு உள்ளே சென்றுள்ளார்கள். இதனால் வந்த வழியை தவற விட்டதால் அரக்கமுட்டியில் உள்ள பாறை நிலத்தில் யாராவது வந்து உதவுவார்கள் என காத்திருந்துள்ளார்கள்.

வியாழக்கிழமை மாடுகளை தேடி காட்டுக்குள் சென்ற பெண்கள் வெள்ளிக்கிழமை காலை வந்தனர். அவர்கள் காணாமல் போன மாடுகள் வியாழக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து விட்டது என்பது கடைசியில் மிகப்பெரிய ட்விஸ்டாக அமைந்துள்ளது.

குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!
உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க டிப்ஸ்