5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நெஞ்சே பதறுதே.. 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொடூரமாக கொன்ற இளைஞர்!

Crime News: ஆந்திராவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது சிறுமியை கொன்று உடலை வயலில் புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது கொடூர குற்றத்தை செய்த நாகராஜ் என்ற 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெஞ்சே பதறுதே.. 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொடூரமாக கொன்ற இளைஞர்!
மாதிரிப்படம் (picture credit: Getty)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 Nov 2024 15:56 PM

ஆந்திராவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது சிறுமியை கொன்று உடலை வயலில் புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பராயுடுவின் கூற்றுப்படி, சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் நாகராஜ் என்ற 24 வயது இளைஞர். இவர் தினமும் சிறுமியுடன் விளையாட வீட்டிற்கு செல்வார். தினமும் சிறுமியுடன் விளையாடி, சிறுமிக்கு பிடித்ததையும் வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

சம்பவத்தன்று மாலை சிறுமியை நாகராஜ் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி கடைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியின் பெற்றோரிடமும் கூறிவிட்டு அழைத்து சென்றிருக்கிறார். திருப்பதியில் உள்ள பள்ளிக்கு அருகில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக சிறுமியை கொடூரமாக கொலை செய்து அருகில் உள்ள வயவெளியில் உடலை புதைத்துள்ளார். பின்னர், அங்கிருந்து உடனே சென்றிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். பல இடங்களில் சிறுமி தேடியும் பார்த்தனர்.

சிறுமி கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கடைசியாக நாகராஜ் அழைத்து சென்றதகா அவர்கள் போலீசிடம் கூறினர். இதனை அடுத்து, போலீசார் நாகராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை, கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

Also Read : சிறுவனை பலி வாங்கிய சைக்கிள் சாகசம்.. அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள்!

கொடூரமாக கொன்ற இளைஞர்

பின்னர், சிறுமியின் உடலை தேடுவதற்காக நாகராஜுவை அழைத்துச் சென்ற போலீஸார், இரவு 9 மணியளவில் அரசுப் பள்ளி அருகே சிறுமியின் உடலை கண்டெடுத்தனர்.  இதனை அடுத்து, சிறுமியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞர் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பதி எஸ்.பி கூறுகையில், “3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்தவர் இந்த கொடூரத்தை செய்துள்ளார். சிறுமியின் தாயார் குற்றம் சாட்டப்பட்டவரை தனது சகோதரனைப் போல நடத்தினார்.

அடிக்கடி வீட்டிற்கு வந்து குழந்தையுடன் விளையாடுவார். குடும்ப உறுப்பினரை போல அந்த இளைஞர் இருந்தாக கூறினர். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read : சாரை சாரையாக மலை ஏறிய பக்தர்கள்.. சறுக்கி விழுந்து காயமடைந்த பரிதாபம்!

தொடரும் கொடூரம்

இதற்கிடையில் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார் . உள்துறை அமைச்சர் அனிதா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நாளை சந்திக்க உள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க வருகிறது. குறிப்பாக, பெண்கள், குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருப்பினும், இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நின்றபாடில்லை. எனவே, இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News