5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Narayanpur Encounter: சத்தீஸ்கரில் போலீசார் அதிரடி தாக்குதல்.. 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

நாராயண்பூர்-தன்டேவாடா எல்லையில் உள்ள மாட் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாராயண்பூர் போலீசார் மற்றும் தண்டேவாடா போலீசார் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சத்தீஸ்கரில் நடப்பாண்டு மட்டும்  இதுவரை 189 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்

Narayanpur Encounter: சத்தீஸ்கரில் போலீசார் அதிரடி தாக்குதல்.. 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 04 Oct 2024 21:47 PM

நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை: சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. நாராயண்பூர்-தன்டேவாடா எல்லையில் உள்ள மாட் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாராயண்பூர் போலீசார் மற்றும் தண்டேவாடா போலீசார் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சத்தீஸ்கரில் நடப்பாண்டு மட்டும்  இதுவரை 189 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Chennai Traffic Diversion: சென்னை விமான கண்காட்சி.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

நாராயண்பூர்-தந்தேவாடா மாவட்ட எல்லையில் உள்ள துல்துலி கிராமத்தின் வனப்பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பஸ்தர் பகுதியின் ஐ.ஜி தெரிவித்துள்ளார். நக்சலைட்டுகள் குறித்த தகவல் கிடைத்ததும் நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு படை குழுக்கள் அனுப்பப்பட்டன. அதில் மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் எஸ்டிஎப் வீரர்கள் இருந்தனர்.

இன்று மதியம் 1 மணியளவில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் சற்றும் எதிர்பாராதவிதமாக  பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.  இதில் 24 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் அனைத்து கைப்பற்றப்பட்டு ஒரே இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. உயிரிழந்தவர்களிடம் இருந்து ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் எஸ்எல்ஆர் உள்ளிட்ட  ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த மோதலில் நமது பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Also Read: Israel: ”தேவைப்பட்டால் ஆக்‌ஷன் தான்”.. இஸ்ரேல், அமெரிக்காவுக்கு அயதுல்லா அலிகமேனி எச்சரிக்கை!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. நக்சலைட்டுகள் மனம் திருந்தி மீண்டும் அமைதியான வாழ்க்கை வாழவும் வழிவகை செய்யப்படுகிறது. தண்டேவாடா மற்றும் நாராயண்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில் நடப்பாண்டு மட்டும் இதுவரை 189 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News