கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி.. தண்டவாளத்தில் தூய்மை பணியிம்போது நேர்ந்த சோகம்!
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே விரைவு ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரயில்வே தண்டவாளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரயில்வே மேம்பாலத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே விரைவு ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரயில்வே தண்டவாளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரயில்வே மேம்பாலத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வள்ளி, ராணி, லட்சுமணன் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு
டெல்லி – திருவனந்தபுரம் விரைவு ரயில் இன்று மாலை 3.05 மணியளவில் ஷோரனூர் பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, அங்கு தண்டாவளத்தில் இருந்த 4 பேர் மீது ரயில் மோதியது. இந்த ரயில் மோதிய விபத்தில் 4 பேரும் உயிரிழந்தனர். குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதியது.
Palakkad, Kerala: Four workers were killed after an express train hit them near Shoranur in Palakkad district today: Shornur police
More details awaited.
— ANI (@ANI) November 2, 2024
மோதலின் தாக்கத்தால் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். அப்பகுதியில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு சடலம் பாரதப்புழா ஆற்றில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மற்றொரு சடலத்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read : உடல் முழுக்க சூடு.. 16 வயது சிறுமி சித்ரவதை செய்து கொன்ற தம்பதி.. சென்னையில் ஷாக்!
உயிரிழந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒருவரின் உடல் தேடப்பட்டு வரும் நிலையில், அடையாளம் காணவில்லை. இதுகுறித்து ஷோரனூர் ரயில்வே காவல்துறை அதிகாரி, “தொழிலாளர்கள் ரயில் நெருங்கி வருவதைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.
இதனால் ரயில் அவர்கள் மீது மோதியது. ஆனால், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார். மேலும், ஷோரணூர் பகுதியில் ரயில் நிறுத்தம் இல்லாததால், அதிக வேகமாக வந்த அந்த ரயில் 4 பேர் மீது மோதியுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த 4 பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. கேரளாவில் நடந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.