5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கேரளாவில் கார்- பஸ் நேருக்கு நேர் மோதல்.. 5 மருத்துவ மாணவர்கள் மரணம்

Kerala medical students died in Accident: திங்கள்கிழமை இரவு ஆலப்புழாவில் உள்ள கலர்கோட்டில் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து மீது மருத்துவ மாணவர்கள் பயணித்த கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவில் கார்- பஸ் நேருக்கு நேர் மோதல்..  5 மருத்துவ மாணவர்கள் மரணம்
கேரளத்தில் நடந்த விபத்தில் மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 03 Dec 2024 10:34 AM

கேரளத்தில் நடந்த இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா சி.ஆபிரகா கூறுகையில், “விபத்தில் உயிரிழந்தவர்கள் லட்சத்தீவுகளைச் சேர்ந்த தேவானந்தன் மற்றும் இப்ராகிம், ஆயுஷ் ஷாஜி, ஸ்ரீதீப் மற்றும் முகமது ஜப்பார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்றார். இந்தச் சம்பவம் கேரளத்தில் பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர், பேருந்தில் பயணம் செய்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

திங்கள்கிழமை (டிச.2, 2024) இரவு ஆலப்புழாவில் உள்ள கலர்கோட்டில் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து மீது மருத்துவ மாணவர்கள் பயணித்த கார் மோதியது.
இந்த கோர விபத்து குறித்து போலீசார் தெரிவிக்கையில், “இரவு 9.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. மருத்துவ மாணவர்கள் பயணித்த கார் குருவாயூரில் இருந்து ஆலப்புழா வழியாக வந்துள்ளது.

இதையும் படிங்க : பெண் போலீஸ் ஆணவக் கொலை.. நடந்தது என்ன? பகீர் சம்பவம்!

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மாநில அரசின் மீது மோதியுள்ளது. அதாவது பேருந்தும், காரும் நேருக்கு நேர் வந்த வேகத்தில் மோதியாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கனமழை காரணமான பார்வைத் திறன் குறைவாக இருந்திருக்கலாம். அதனால், இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது ” என்றனர். இந்த கோர விபத்து காரணமான அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த காரில் இருந்த மேலும் 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல், பேருந்தில் பயணித்த இரண்டுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : நேற்று ஜாமின், இன்று மினிஸ்டர்.. செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

Latest News