4ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 64% வாக்குகள் பதிவு… மேற்கு வங்கம் டாப்!
Loksabha Election: 96 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
4ஆம் கட்ட வாக்குப்பதிவு:
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தலில் மக்களவையில் மொத்தமுள்ள 535 தொகுதிகளில் 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன. இதனை அடுத்து, நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடந்து முடிந்தது. நேற்று காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்து முடிந்தது. மற்ற இடங்களில் அமைதியாக வாக்குப்பதிவு முடிந்தாலும், ஆந்திரா, மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே கலவரங்கள் நடந்தன.
Also Read : சொந்த கட்சி எம்.பியை தாக்கிய கெஜ்ரிவாலின் உதவியாளர்? முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?
வாக்குப்பதிவு நிலவரம்:
4ஆம் கட்ட வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக 67.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 76.68 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 37.93 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
மேலும், ஆந்திராவில் 68.32 சதவீத வாக்குகளும், பீகாரில் 56.87 சதவீத வாக்குகளும், ஜார்க்கண்டில் 64.59 சதவீத வாக்குகளும், மத்திய பிரதேசத்தில் 70.68 சதவீத வாக்குகளும், ஒடிசாவில் 64.81 சதவீத வாக்குகளும், தெலங்கானாவில் 62.81 சதவீத வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் 58.05 சதவீத வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 76.68 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் தொகுதியில் நேற்று நடந்த வாக்குப்பதிவில் 37.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 1998ஆம் ஆண்டு பிறகு அங்கு பதிவான அதிகபட்ச வாக்குகள் இதுவே ஆகும். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பள்ளத்தாக்கில் நடந்த முதல் பொதுத் தேர்தல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடந்த ஆந்திராவில் 78.36 சதவீத வாக்குகளும், ஒடிசாவில் (முதல் கட்ட வாக்குப்பதிவு) 73.97 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : CBSE 12th Result: சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 87.98% மாணவர்கள் தேர்ச்சி!