5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Telangana: எமனாக அமைந்த பள்ளம்.. தெலங்கானா கார் விபத்தில் 7 பேர் பலி

கார் விபத்தில் துரதிஷ்டவசமாக காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். சம்பவம் தொடர்பாக மேடக் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேடக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  

Telangana: எமனாக அமைந்த பள்ளம்.. தெலங்கானா கார் விபத்தில் 7 பேர் பலி
கார் விபத்து
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 16 Oct 2024 19:02 PM

தெலங்கானவின்  நடைபெற்ற சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள சிவம்பேட்டையில் இன்று மாலையில் இந்த பயங்கர சாலை விபத்தானது நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும் இரண்டு சிறுமிகளும் அடங்குவர். உசிரிகப்பள்ளி என்ற இடத்தில் வேகமாக வந்த ஒரு காரின் டிரைவர் சாலையில் பள்ளம் இருந்ததைப் பார்த்து பிரேக் போட முயன்றுள்ளார். ஆனால் கார் அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள பள்ளத்தில் வேகமாக இறங்கி ஏறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.

Also Read: Viral Video : சிறுநீர் பயன்படுத்தி சமைத்த பணிப்பெண்.. வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடும்பத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்!

இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். சம்பவம் தொடர்பாக மேடக் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேடக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Also Read: Metro Trains: நோட் பண்ணுங்க.. பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கார் விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பமுபண்டா தாண்டா, ரத்னாபூர் மற்றும் தல்லப்பள்ளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியதால் உயிரிழந்தவர்கள் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக உசிரிக்கப்பள்ளி முதல் வேல்துருத்தி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அரசு இனியும் உயிரிழப்புகள் ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest News