5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Building Collapsed : திடீரென இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்.. 8 பேர் பலியான சோகம்!

8 Died | இந்த கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் கண்டெய்னர் லாரி ஒன்றும் சிக்கிக்கொண்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடட் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறை அடங்கிய குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர்.

Building Collapsed : திடீரென இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்.. 8 பேர் பலியான சோகம்!
இடிந்து விழுந்த கட்டடம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 08 Sep 2024 11:24 AM

திடீரென இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம் : உததர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரு 3 மாடி கட்டடம் இருந்து வந்துள்ளது. அந்த 3 மாடி கட்டடத்தின் தரை தளத்தில் வாகனங்கள் பழுதுகாக்கும் கடையும், சேமிப்பு கடையும் செயல்பட்டு வந்துள்ளன. இதேபோல கட்டடத்தின் முதல் தளத்தில் மருத்துவ சேமிப்பு கிடங்கும், இரண்டாவது தளத்தில் வெட்டுக் கருவிகள் சேமிப்பு கிடங்கும் செயல்பட்டு வந்துள்ளன. இந்த கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில், தற்போது அங்கு சில கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்ப்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : TVK Party : தவெக மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய காவல்துறை.. சூடு பிடிக்கும் அரசியல் களம்.. அடுத்தது என்ன?

கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

இந்த கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் கண்டெய்னர் லாரி ஒன்றும் சிக்கிக்கொண்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடட் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறை அடங்கிய குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர். மீட்டு படையினரின் முதற்கட்ட தகவலின் படி இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது உயிரிழப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் சிக்கி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பலர் சிக்கிக்கொண்டிருக்கலாம் என வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : CM MK Stalin Speech : “தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம்”.. வட அமெரிக்க தமிழ்ச் சங்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

கோயில் சுவர் இடிந்து விழுந்து சிறுவர்கள் பலி

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் உள்ள ஹர்தவுல் பாபா கோயிலி சிறப்பு வழிபாடு நடந்துக்கொண்டிருந்தது. அப்போது கோயிலின் அருகில் இருந்த பழைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 சிறுவர்கள் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Latest News