5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bengaluru: பெங்களூரு கட்டிட விபத்தில் 2 தமிழர்கள் உயிரிழப்பு.. உரிமையாளர் கைது!

கிழக்கு பெங்களூருவில் உள்ள பாபுசபால்யா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டிடம் நேற்று மாலை இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டிடம் எந்த வித விரிசலும் இல்லாமல் மொத்தமாக பெயர்ந்து விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்ட திட்டமிடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 6 மாடி வரை கட்டப்பட்டுள்ள நிலையில் விபத்து நடைபெற்றுள்ளது.

Bengaluru: பெங்களூரு கட்டிட விபத்தில் 2 தமிழர்கள் உயிரிழப்பு.. உரிமையாளர் கைது!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 23 Oct 2024 18:30 PM

கட்டிட விபத்து: பெங்களூருவில் கனமழையால் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தமிழர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்யராஜ் ஆக இருவரும் உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

Also Read: Viral Video : இருசக்கர வாகனம் ஓட்டிய பள்ளி சிறுமி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. இணையத்தில் வைரல்!

இதனால் திரும்பி திசை எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மக்கள் அவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் வெள்ளப் பாதிப்பில் மக்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இதனிடையே கிழக்கு பெங்களூருவில் உள்ள பாபுசபால்யா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டிடம் நேற்று மாலை இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also ReadZomato : தீபாவளியை முன்னிட்டு பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ.. எவ்வளவு தெரியுமா?

கட்டிடம் எந்த வித விரிசலும் இல்லாமல் மொத்தமாக பெயர்ந்து விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்ட திட்டமிடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 6 மாடி வரை கட்டப்பட்டுள்ள நிலையில் விபத்து நடைபெற்றுள்ளது. கட்டட உரிமையாளர் புவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்ததாரர் முனியப்பாவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனியப்பா மகன் மோகன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Latest News