5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

AIDS : எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 828 மாணவர்கள்.. 47 பேர் உயிரிழந்த சோகம்.. திரிபுராவில் என்ன நடக்கிறது?

Tripura HIV Report | திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அதில் 47 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 572 மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக வெளி நாடுகளுக்கு சென்று விட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

AIDS : எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 828 மாணவர்கள்.. 47 பேர் உயிரிழந்த சோகம்.. திரிபுராவில் என்ன நடக்கிறது?
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 11 Jul 2024 17:02 PM

அதிர்ச்சி தகவல் : திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 47 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “இதுவரை 828 மாணவர்கள் எய்ட்ஸ் நோயால் பதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 572 மாணவர்கள் உயிருடன் இருக்கின்றனர். 47 மாணவர்கள் இந்த பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர். பல மாணவர்கள் திரிபுராவில் இருந்து உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்” என்று திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

போதை ஊசிக்கு அடிமையாகி இருக்கும் 100 கணக்கான மாணவர்கள்

திரிபுரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, மாநிலத்தின் 220 பள்ளிகள், 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஊசி மூலம் போதை பொருட்களை எடுத்துக்கொண்டுள்ளது கண்டறிந்துள்ளது. நரம்பு மூலம் போதைப் பொருட்களை உட்கொள்ளும் பழகத்திற்கு மாணவர்கள் அடிமையாகி உள்ளதாகவும் இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது. மொத்தம் 164 மாணவர்களை சோதனை செய்ததன் மூலம், திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பெரும்பாலான மாணவர்கள் எய்ட்ஸ் பாதிப்பற்ற குடும்பங்களை சேர்ந்தவர்கள்

“பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலான மானவர்கள் எய்ட்ஸ் பாதிப்பற்ற வசதி படைத்த குடும்பங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அரசாங்க துறைகளில் பணிபுரிபவர்களாகவும், குழந்தைகள் கேட்கும் பொருட்களை மறுப்பு தெரிவிக்காமல் வாங்கி கொடுப்பவர்களுமாக உள்ளனர். அவர்களின் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என்பதை அவர்கள் கண்டறிவதற்கு முன்பு, அவர்கள் முழுவதுமாக போதைக்கு அடிமையாகி இருந்தனர்” என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஊசி மூல பரவும் எய்ட்ஸ் தொற்று

உலக அளவில் எய்ட்ஸ் தொற்றுக்கு அடிப்படையாக இருப்பது ஊசியை மாறி மாறி பயன்படுத்துக்கிக்கொள்வதாக தான் உள்ளது. அவ்வாறு ஊசிகளை மாறி மாறி பயன்படுத்துவதன் மூலம் , அது ஒரு ரத்ததில் இருந்து மற்றொரு ரத்தத்திற்கு தொற்றை பரவ செய்கிறது. பல இடங்களில் புதிதாக எய்ட்ஸ் தொற்று உருவாவதற்கும் இதுவே காரணமாக உள்ளது.

இதையும் படிங்க : விண்வெளியிலும் நுண்ணுயிரிகள்.. தீவிர ஆராய்ச்சியில் இறங்கிறய விஞ்ஞானிகள்!

ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை

கடந்த மே மாத நிலவரப்படி இதுவரை சுமார் 8,729 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை  மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தற்போது 5,674 பேர் உயிருடன் உள்ளனர். அவர்களில் 4,570 பேர் ஆண்களாக உள்ள நிலையில் 1,103 பெண்கள் உள்ளனர். அதில் ஒருவர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : UK Election 2024 : கையில் பகவத் கீதை.. பிரிட்டன் எம்.பி.யாக பதவியேற்ற இந்திய வம்சாவளி பெண்!

இந்நிலையில் திரிபுராவின் மாணவர்களின் நிலையை, குறித்து திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News