சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் உயிரிழப்பு.. கோயிலில் நடந்த சோக சம்பவம்! - Tamil News | 9 Children killed in Madhya Pradesh after an old house wall collapsed on temple | TV9 Tamil

சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் உயிரிழப்பு.. கோயிலில் நடந்த சோக சம்பவம்!

Published: 

04 Aug 2024 20:52 PM

Shocking News | இந்த சம்பவம் குறித்து தெரிவித்த காவல்துறை, இந்த சம்பவம் சரியாக காலை 9 மணிக்கு நடைபெற்றுள்ளது. சனோதா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஷாபூர் கிராமத்தில் உள்ள கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் சிறுவர்கள் இருந்துள்ளனர். அப்போது கோயிலுக்கு அருகில் உள்ள பழைய வீட்டின் சுவர் இடிந்து கூடாரம் மீது விழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் உயிரிழப்பு.. கோயிலில் நடந்த சோக சம்பவம்!

விபத்து நடந்த இடம்

Follow Us On

9 சிறுவர்கள் உயிரிழப்பு : மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் உள்ள ஹர்தவுல் பாபா கோயிலி சிறப்பு வழிபாடு நடந்துக்கொண்டிருந்தது. அப்போது கோயிலின் அருகில் இருந்த பழைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 சிறுவர்கள் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோயில் மீது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 சிறுவர்கள் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 சிறுவர்கள் பலி

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த காவல்துறை, இந்த சம்பவம் சரியாக காலை 9 மணிக்கு நடைபெற்றுள்ளது. சனோதா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஷாபூர் கிராமத்தில் உள்ள கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் சிறுவர்கள் இருந்துள்ளனர். அப்போது கோயிலுக்கு அருகில் உள்ள பழைய வீட்டின் சுவர் இடிந்து கூடாரம் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கோயில் விழாவில் திடீரென சாய்ந்த ராட்டினம்.. அந்தரத்தில் தொங்கிய மக்கள்.. அடுத்து நடந்தது என்ன?

உயிரிழந்த சிறுவர்கள் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்

அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக காவல் அதிகாரி பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும், கோயிலில் இரண்டு நாடகளாக ராம் கதா வழிபாடு நடைபெற்று வந்த நிலையில், கோயிலில் கூடாரம் அமைக்கப்பட்டு அங்கு சிறுவர்கள் களிமண் கொண்டு சிவ லிங்கங்களை உருவாக்கி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவர்கள் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவர் இடிந்து விழுந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

இந்த சம்பவத்திற்கு பிறகு பழுதாகி இருந்த அந்த வீடு புல்டோசர் உதவியுடன் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறை அதிகாரி பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சூப்பர் பைக் மோதி சம்பவ இடத்திலே பலியான காவலர்.. அதிர்ச்சி சம்பவம்!

பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களின் உடல்கள்

இந்த சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி கவுரவ் குப்தா கூறியதாகவது, இடிந்து விழுந்த அந்த வீடு, படேல் என்பவருக்கு சொந்தமானது என்றும் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பிரேத பரிசோதனை முடிந்து 9 சிறுவர்களின் உடல்களும் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories
“பெருமாள் பெயரில் அரசியல் நடக்குது” திருப்பதி லட்டு குறித்து ஜெகன் மோகன் காட்டம்!
Tirupati Laddu Controversy: “மாட்டு கொழுப்பு..” லட்டு விற்பனை மூலம் திருப்பதி கோயிலுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா?
Tirupati Laddoo : திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்.. வலுக்கும் கண்டனம்.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி!
Tirupati Laddu: ”மாட்டு கொழுப்பு.. மீன் எண்ணெய்” திருப்பதி லட்டு குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கனடா செல்ல பிளானா? இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல்.. கஷ்டம் தான் ரொம்ப!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பா? பகீர் கிளப்பிய சந்திரபாபு நாயுடு.. என்ன நடக்கிறது?
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version