Shocking News : காட்டுக்குள் கேட்ட பெண்ணின் அழுகுரல்.. அடுத்து நடந்தது என்ன.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!
Woman Rescued | காவல்துறையின் விசாரணையில், 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் பெயர், லலிதா குமார் என்று தெரியவந்துள்ளது. அவர் ஒரு அமெரிக்கர் என்று, தமிழ்நாட்டில் வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமன்றி அந்த பெண்ணின் கணவர் தான் குடும்ப தகராறு காரணமாக அந்த பெண்ணை காட்டுக்கு நடுவில், மரத்தில் சங்கிலியால் கட்டி வைததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி சம்பவம் : மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் பகுதியில் உள்ள காட்டில் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்த நபர், இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து காட்டிற்கு சென்ற காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், காட்டில் ஒரு மரத்தில் வயதான பெண் ஒருவர் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்துள்ளார். அந்த பெண்ணை காட்டிலிருந்து மீட்ட போலீசார், உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நடு காட்டில் இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட பெண்
காவல்துறையின் விசாரணையில், 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் பெயர், லலிதா குமார் என்று தெரியவந்துள்ளது. அவர் ஒரு அமெரிக்கர் என்றும், தமிழ்நாட்டில் வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமன்றி அந்த பெண்ணின் கணவர் தான் குடும்ப தகராறு காரணமாக அந்த பெண்ணை காட்டுக்கு நடுவில், மரத்தில் சங்கிலியால் கட்டி வைததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சாலையில் சென்ற காரை தாக்கிய இளைஞர்கள்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்.. வைரலாகும் வீடியோ!
40 நாட்களாக உணவின்றி நடு காட்டில் தவித்த லலிதா
அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் உடல் ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணால் பேச முடியவில்லை என்றும் தனக்கு என்ன பிரச்னை என்பதை அவர், காகிதத்தில் தான் எழுதி காட்டுகிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த பெண் கடந்த 40 நாட்களாக உணவு இன்றி சித்ரவதை செய்யப்பட்டதாகவும், தனக்கும், தனது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தன்னை காட்டில் கட்டி வைத்ததாகவும் அந்த பெண் மருத்துவர்களிடம் எழுதி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : திடீரென அலுவலகத்தில் நுழைந்த பாம்பு.. அசால்டாக பிடித்த இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா போலீஸ், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். அந்த பெண் வாக்குமூல அளிக்கும் நிலையில் இல்லை என்றும், பல நாட்களாக சாப்பிடாமல் இருந்தது மற்றும் அந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகவும் அவர் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எத்தனை நாட்கள் காட்டில் கட்டி வைக்கப்படிருந்தார் என்பது குறித்த சரியான தகவல் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.