5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Delhi : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை.. டெல்லியை அலறவிட்ட பகீர் சம்பவம்!

Family Assassination | டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் உள்ள தியோல் என்ற பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு கோமல் (வயது 47) என்ற மனைவியும், கவிதா என்ற 23 வயது மகளும் ஒரு மகனும் இருந்துள்ளனர்.

Delhi : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை.. டெல்லியை அலறவிட்ட பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 04 Dec 2024 22:55 PM

டெல்லியில் பெற்றோர் மற்றும் மகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர கொலை சம்பவத்தின் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினர் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடூர சம்பத்தில் கொலை பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Assam : அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த ஹிமந்த பிஸ்வா சர்மா!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை

டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் உள்ள தியோல் என்ற பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு கோமல் (வயது 47) என்ற மனைவியும், கவிதா என்ற 23 வயது மகளும் ஒரு மகனும் இருந்துள்ளனர். இன்று, ராஜேஷ், கோமல் தம்பதியின் திருமணம் நாள். இந்த நிலையில், ராஜேஷின் மகன் அதிகாலை 5 மணி அளவில் தனது பெற்றோருக்கு திருமண வாழ்த்து கூறிவிட்டு வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் நடைபயிற்சி முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர், வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது தாய், தந்தை மற்றும் சகோதரி கத்தியால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.

இதையும் படிங்க : CM MK Stalin : வானிலை கணிப்புகளை விட அதிக அளவு பெய்த மழை.. புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்!

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை

இந்த கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், கொலை நடந்த இடத்தை முதலில் பார்த்தது அவர்களது மகன் என்பதால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்கள் சேகரிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி, கொலை தொடர்பான ஆயுதங்கள் மற்றும் ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அதன்படி, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் எதுவும் சேதப்படுத்தபடவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் திருட்டுக்காக இந்த கொலைகள் நடைபெறவில்லை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க : ISRO : கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரச்னை.. தடுத்து நிறுத்தப்பட்ட ராக்கெட்.. இஸ்ரோவில் பரபரப்பு சம்பவம்!

கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்

டெல்லியை அதிகாலையில் நடுநடுங்க வைத்த இந்த கொலை சம்பவம் குறித்து டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பதிவிட்டுள்ள அவர், டெல்லியில் இத்தகைய கொலை சம்பவங்கள் நடைபெறுவது வேதனையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல டெல்லியின் தற்போதைய முதலமைச்சர் ஆன அதிஷியும் இந்த கொலை சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அரசை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News