5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Indian Army: வயநாடு சம்பவம்.. சிறுவன் எழுதிய கடிதத்தால் கண்கலங்கிய இந்திய ராணுவம்!

Wayanad: கிட்டதட்ட 3 கிராமங்கள் மண்ணுக்குள் சென்றதை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்து தான் போனது. அதேசமயம் கனமழையால்  பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள், உடமைகள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

Indian Army: வயநாடு சம்பவம்.. சிறுவன் எழுதிய கடிதத்தால் கண்கலங்கிய இந்திய ராணுவம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 04 Aug 2024 17:19 PM

இந்திய ராணுவம்: ஒட்டுமொத்த இந்திய நாடும் வயநாட்டில் 5வது நாளை தாண்டி நடைபெறும் நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியைத் தான் தொடர்ச்சியாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக பார்வையிட்டு வருகிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி கனமழை பெய்த நிலையில் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மண்ணோடு, மண்ணாக புதைந்து போயினர். கிட்டதட்ட 3 கிராமங்கள் மண்ணுக்குள் சென்றதை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்து தான் போனது. அதேசமயம் கனமழையால்  பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள், உடமைகள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இந்திய ராணுவம், தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: Tamilnadu Weather Alert: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எங்கெங்கு தெரியுமா?

இப்படியான நிலையில் இந்திய ராணுவம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டது. அதை ஒரு சிறுவன் மலையாள மொழியில் எழுதியிருந்தான். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கடிதம் வெளியிடப்பட்டது.

அந்த கடிதத்தில்,

அன்பிற்குரிய இந்திய ராணுவத்திற்கு,

என்னுடைய பெயர் ரியான். எனது அன்புள்ள வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி பேரழிவுக்கு உள்ளாகியதை பார்த்தேன். இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் மீட்கும் காட்சிகளை கண்டு நான் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தேன். நான் இன்னொரு வீடியோவில் நீங்கள் பிஸ்கட் சாப்பிடும் காட்சிகளை கண்டேன். அது உங்கள் பசியை போக்கியிருக்கும் என நான் நம்புகிறேன்.மேலும் நீங்கள் பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு பாலம் கட்டியதையும் பார்த்தேன். அது என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. நான் எதிர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டைக் காப்பாற்ற விரும்புகிறேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: Rahul Dravid: இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்..? கிரிக்கெட்டில் புது ட்விஸ்ட்!

அதற்கு பதிலளித்த ராணுவம், “அன்புள்ள சிறுவன் ராயனுக்கு, உன்னுடைய இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்கள் மனதை ஆழமாகத் தொட்டது. இக்கட்டான காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.  உங்கள் கடிதம் இந்த நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உன்னைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். நீ சீருடை அணிந்து எங்களுடன் நிற்கும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம். இளம் வீரரே, உன்னுடைய தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் நன்றி” என பதிலளித்துள்ளது.

Latest News