5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

J&K Terror Attack: எல்லையில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்.. தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்..

கடந்த வாரம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு போர்ட்டர்கள் உயிரிழந்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த வாரம், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவு பணியாளர்கள் மற்றும் போர்ட்டர்களை ஏற்றிச் சென்ற கான்வாய் அஃப்ராவத் ரேஞ்சில் உள்ள நாகின் போஸ்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​போடாபத்ரியில் இரண்டு ராணுவ லாரிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

J&K Terror Attack: எல்லையில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்.. தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்..
எல்லையில் பங்கரவாத தாக்குதல் (pic cortesy: twitter)
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 28 Oct 2024 16:08 PM

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூரில் உள்ள பட்டால் பகுதியில் ராணுவ வாகனம் மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரியவந்துள்ளது. ராணுவ ஆம்புலன்சை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பட்டல் பகுதியில் இராணுவ வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது. உஷாரான ராணுவ வீரர்கள் தீவிரவாத தாக்குதலை முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமும் ஜம்மு காஷ்மீரில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்:

கடந்த வாரம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு போர்ட்டர்கள் உயிரிழந்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த வாரம், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவு பணியாளர்கள் மற்றும் போர்ட்டர்களை ஏற்றிச் சென்ற கான்வாய் அஃப்ராவத் ரேஞ்சில் உள்ள நாகின் போஸ்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​போடாபத்ரியில் இரண்டு ராணுவ லாரிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, போதாபத்ரியில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, வருத்தம் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பக்கமாக எக்ஸில் பதிவிட்ட அவர், வடக்கு காஷ்மீரின் போதாபத்ரி பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமான செய்தி. இந்த தாக்குதலில் பலி மற்றும் சிலர் காயம் அடைந்தனர். மேலும், காஷ்மீரில் சமீபத்தில் நடந்த இந்த தாக்குதல்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: இந்தியாவின் முதல் ராணுவ விமான உற்பத்தி ஆலை.. குஜராத்தில் திறந்து வைத்த பிரதமர் மோடி..

இந்த தாக்குதலுக்கு முன்பே, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் உள்ள ககன்கிர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை கட்டுமான தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 தொழிலாளர்கள் மற்றும் ஒரு மருத்துவர் கொல்லப்பட்டனர். எல்லையில் தொடரும் தாக்குதலால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டு வந்தாலும் இது சற்று கவலையளிக்கும் விஷயமாக உள்ளது என கூறுகின்றனர்.

Latest News