மகாராஷ்டிரா 2024 தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரு தமிழர்கள்.. யாருக்கு வெற்றி?
Maharashtra Assembly elections : மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை (நவ.23, 2024) வெளியாக உள்ளன. இந்தத் தொகுதியில் ஒரே தொகுதியில் இரு தமிழர்கள் வெவ்வேறு கட்சிகளின் சார்பாக போட்டியிடுகின்றனர்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த மாநிலம், , 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு பெரிய அரசியல் அதிர்வுகளை கண்டுள்ளது. இதனால் 2024 தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளன. இந்தத் தேர்தலில் இரு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்? யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? பார்க்கலாம்.
அண்மைக் காலமாக மகாராஷ்டிராவில் பிரதான மாநிலக் கட்சிகளான சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் அரசியல் அதிர்வுகளுக்கு தொடர் காரணமாக இருந்தது.
2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க, சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்காமல் தடுத்ததில் சரத் பவாரின் அரசியல் சாணக்கியத்தனம் முக்கியமானது.
மகாராஷ்டிரா அரசியலை உலுக்கிய இரு சம்பவங்கள்
ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வில் சிவசேனா, பா.ஜ.க இடையே ஏற்பட்ட அரசியல் பிளவை சரியாக பயன்படுத்தி இயற்கை கூட்டணி என அறியப்பட்ட அந்தக் கூட்டணியை உடைத்ததுடன், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தினார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா என மூன்று சக்கர கூட்டணியை உருவாக்கினார். எனினும், இந்தக் கூட்டணியால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியமைக்க முடியவில்லை.
இதையும் படிங்க : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம் மீதான விசாரைணக்கு தடை.. டெல்லி உயர் நீதிமன்றம்
சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே-வை இழுத்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தது. தற்போது இந்தக் கூட்டணியில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உள்ளது.
இதனால் இம்முறை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள நிலவரப்படி மாநிலத்தில் ஆளும் ஷிண்டே சிவசேனா, பா.ஜ.க மற்றும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஒரே அணியில் உள்ளன.
கேப்டன் தமிழ் செல்வன் vs கணேஷ் யாதவ்
மறுபுறம் எதிர்க்கட்சி கூடாரத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஒர் தொகுதி தமிழர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துவருகிறது.
அது தமிழர்கள் அதிகம் வசிக்கும் சயன் கோலிவாடா தொகுதி ஆகும். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கணேஷ் யாதவ்வும், பா.ஜ.க. சார்பில் கேப்டன் தமிழ் செல்வனும் போட்டியிடுகின்றனர். தமிழ் செல்வன் இந்தத் தொகுதியில் இரு முறை தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக மக்கள் பணியாற்றி வருகிறார்.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
இம்முறை அவர் வெற்றி பெற்றால் அது ஹாட்ரிக் வெற்றி ஆக அமையும். அதேநேரம் கடந்த முறை தமிழ் செல்வனுடன் மோதி பின்னடவை சந்தித்தவர் கணேஷ் யாதவ்.
ஆக இருவருக்கும் இடையேயான இந்தப் போட்டி கவனம் ஈர்த்து வருகிறது. இந்தத் தொகுதியில் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : Exit polls: ஜார்க்கண்டில் ஆட்சி மாற்றம்? மராட்டியத்தில் யார் ஆட்சி?