Accident: முந்தி செல்ல முயன்றதால் விபரீதம்.. வேன் மீது பேருந்து மோதி 15 பேர் உயிரிழப்பு - Tamil News | A tragic accident occurred on the Agra-Aligarh National Highway and 15 people died | TV9 Tamil

Accident: முந்தி செல்ல முயன்றதால் விபரீதம்.. வேன் மீது பேருந்து மோதி 15 பேர் உயிரிழப்பு

Published: 

07 Sep 2024 09:18 AM

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு இருந்த உள்ளூர் மக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Accident: முந்தி செல்ல முயன்றதால் விபரீதம்.. வேன் மீது பேருந்து மோதி 15 பேர் உயிரிழப்பு

கோப்பு புகைப்படம்

Follow Us On

பேருந்து விபத்து: உத்திரப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று மினிவேன் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் ஹத்ராஸ் என்ற இடத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. ஹத்ராஸில் இருந்து ஆக்ரா நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று மாலை நேரத்தில் இந்த விபத்தானது நிகழ்ந்தது. மினிவேனில் இருந்த பொதுமக்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு மதிய உணவுக்குப் பின் சேவாரா கிராமத்திற்கு சென்றுக்கொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலை 93ல் வந்தபோது மினிவேன் மீது பேருந்து மோதியுள்ளது.

Also Read: Sivakarthikeyan: ரஜினிகிட்ட நடக்கல.. அடுத்து விஜய்யா? – சிவகார்த்திகேயனை விமர்சித்த ப்ளூசட்டை மாறன்!

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு இருந்த உள்ளூர் மக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதனிடையே விபத்தில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். அதேசமயம் உத்தரப்பிரதேச  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளார். அதன்படி இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Also Read: Tamilaga Vettri Kazhagam: த.வெ.க., மாநாடு.. இவர்களுக்கு அனுமதியில்லை.. விஜய் போட்ட உத்தரவு!

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் கூறும்போது, “ஆக்ரா – அலிகார் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தானது மினி வேனை முந்தி செல்ல பேருந்து முயன்ற போது நடைபெற்றது எனவும் கூறினார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு குழந்தைகளும் அடங்கும்”  எம அவர் தெரிவித்தார். இதற்கிடையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version