5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Delhi CM Atishi: டெல்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி… சவால்கள் என்னென்ன?

Atishi Marlena: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா பதவியேற்றுக் கொண்டார். டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சச்சேனா அதிஷிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராகிறார் அதிஷி. சுஷ்மா ஸ்வ்ராஜ், ஷீலா தட்சித்தை தொடர்ந்து டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சரானார் அதிஷி.

Delhi CM Atishi: டெல்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி… சவால்கள் என்னென்ன?
டெல்லி முதல்வர் அதிஷி (Picture Credits: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 Sep 2024 19:07 PM

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா பதவியேற்றுக் கொண்டார். டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சச்சேனா அதிஷிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராகிறார் அதிஷி. காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித், பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார். முதலமைச்சர் அதிஷி மர்லெனாவுடன் 5 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். கோபால் ராய், இம்ரான் ஹுசைன், கைலாஷ் கஹ்லோட் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர் .

டெல்லியின் மதுபான் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும், அவர் முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது, எந்த கோப்புகளிலும் கையெழுத்திட கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்திருக்கிறது. இதையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவித்தார்.


கெஜ்ரிவால் ராஜினாமாவை தொடர்ந்து, அடுத்த முதல்வர் தேர்ந்தெடுப்பது குறித்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு  நிலையில், இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதிஷி டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வர் மட்டுமல்ல, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து இந்தியாவின் ஒரு மாநிலத்தை வழிநடத்தும் இரண்டாவது பெண்மணியும் ஆவார்.

Also Read: அமெரிக்காவுக்கு பறக்கும் மோடி.. அஜெண்டா இதுதான்.. அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் இரு நாட்டு உறவு?

அதிஷியின் கல்வி வாழ்க்கை:

1981ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி பிறந்தார். அவரது பெற்றோர்களான விஜய் சிங் மற்றும் த்ரிப்தா சிங் இருவரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்கள். டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் தனது பள்ளியை முடித்த அதிஷி, டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

2003ஆம் ஆண்டு செவனிங் ஸ்காலர்ஷிப் மூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  பின்னர் 2005ல், ஆக்ஸ்போர்டில் உள்ள மாக்டலன் கல்லூரியில் கல்வி ஆராய்ச்சிக்காகச் சென்றார். அதிஷிக்கும் கல்வியில் அனுபவம் உண்டு. அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு, ஆந்திராவில் உள்ள ரிஷி வேலி பள்ளியில் வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆசிரியராக பணியாற்றினார்.

திருமண வாழ்க்கை:

2006ஆம் ஆண்டில், பஞ்சாபி ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த பிரவீன் சிங்கை அதிஷி திருமணம் செய்து கொண்டார். பிரவீன் சம்பவ்னா பொதுக் கொள்கை மற்றும் அரசியல் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் ஆசிரியரின் பணியுடன் தொடர்புடையவர். ஐஐடி டெல்லி மற்றும் ஐஐஎம் அகமதாபாத்தில் பட்டம் பெற்ற பிறகு, கார்ப்பரேட் துறையில் சுமார் எட்டு ஆண்டுகள் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆலோசனை நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். சமூக சேவைப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், அவர் பொது வாழ்க்கையில் அரிதாகவே காணப்படுகிறார்.

அரசியல் வாழ்க்கை:

2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் அதிஷி இணைந்தார். ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களில் அதிஷியும் ஒருவர். ஆம் ஆத்மியின் ஆரம்பகால கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய குரலாக மாறினார். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினரான அவர், 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை மணீஷ் சிசோடியாவிற்கு கல்வித்துறை தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் ஆலோசராக இருந்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லியில் போட்டியிட்ட இவர், பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீரிடம் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து, 2020 சட்டப்பேரவை தேர்தலில் தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றார் அதிஷி. 2023ஆம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் நிதி, பொதுப்பணித்துறை, மின்சாரம், சேவைகள், வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை வகித்தார்.

Also Read: மாதவிடாய் விடுமுறை.. பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை.. அரசு எடுத்த முடிவு!

மதுபான கொள்கை வழக்கில் அப்போது துணை முதலமைச்சராக இருந்து மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் அமைச்சரானார்.  கெஜ்ரிவால் சிறைக்கு சென்ற பிறகு கட்சி பணிகளை கவனித்தார். அதிஷி ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. இருப்பினும், அதிஷிக்கு கார் அல்லது நகைகள் போன்ற சொந்த சொத்துக்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்று இருக்கிறார். ஏற்கனவே, டெல்லியில் குடிநீர் பிரச்னை, சாலைகளில் தண்ணீர் தேங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் நிலையில், இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை அதிஷி எடுக்கப்போகிறார்? இதில் இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்வார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

Latest News