Accident: கூகுள் மேப் காட்டிய வழி.. பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார்.. 3 பேர் பலி!

அந்த பாலம் கட்டுமானத்தில் இருந்து வருகிறது. பாதி பாலம் தான் கட்டப்பட்டுள்ளதை அறிந்ததும் கார் ஓட்டுநர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து ராமகங்கா ஆற்றில் விழுந்தது. முன்னதாக இப்பகுதியில் பாலம் இருந்த நிலையில் கடைசியாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்தது.

Accident: கூகுள் மேப் காட்டிய வழி.. பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார்.. 3 பேர் பலி!

கார் விபத்து

Published: 

25 Nov 2024 09:31 AM

உத்தரபிரதேச மாநிலத்தில் கூகுள் மேப் பார்த்து சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள பரேலியில் கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்றில் இருந்து வேகமாக வந்த கார் கீழே ஓடும் ராமகங்கா ஆற்றில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவும் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: Crime: மனைவி தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!

விபத்து நடந்தது எப்படி?

இதில் வெளியான தகவலின்படி, நேற்று (நவம்பர் 24) காலை 10 மணியளவில் 3 பயணிகளை ஏற்றிக்கொண்டு கார் பரேலியில் இருந்து படவுன் மாவட்டத்தில் உள்ள டதாகஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரிய வந்தது. காரை ஓட்டிய நபருக்கு செல்லும் வழி தெரியாததால் கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளார். அப்போது வழி ​​ராமகங்கா ஆற்றில் மேல் கட்டப்பட்டு வரும் பாலத்தின் மீது காட்டியுள்ளது. பாலம் என்பதாலும் அருகில் எந்த வாகனமும் இல்லை என்பதாலும் இயல்பை காட்டிலும் வேகமாக சென்றுள்ளது.

ஆனால் அந்த பாலம் கட்டுமானத்தில் இருந்து வருகிறது. பாதி பாலம் தான் கட்டப்பட்டுள்ளதை அறிந்ததும் கார் ஓட்டுநர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து ராமகங்கா ஆற்றில் விழுந்தது. முன்னதாக இப்பகுதியில் பாலம் இருந்த நிலையில் கடைசியாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்தது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான முன்னெச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படாமல் இருந்துள்ளது.

மேலும் இறந்த 3 பேரும் ஜிபிஎஸ் மூலம் டதாகஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் விபத்து நடந்துள்ளது. கூகுள் மேப்பில் பாதை பாலத்தைக் கடக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெள்ளத்தால் பாலத்தின் முன் பகுதி இடிந்து விழுந்தது பற்றி GPS கருவியில் எந்த வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்துள்ளது.

மேலும் கட்டுமானத்தில் உள்ள பாலத்தில் பாதுகாப்புத் தடைகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் இல்லாதது ஆபத்தை அதிகரிக்கிறது, இது அபாயகரமான விபத்துக்கு வழிவகுக்கிறது” என்று பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அடையாளம் காணும் பணி

ஆற்றில் இருந்து வாகனம் மற்றும் சடலங்களை மீட்டுள்ளதாக கூறியுள்ள போலீசார், உயிரிழந்தவர்கள் யார் என்ற அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து தெரிந்தவுடன், ஃபரித்பூர், பரேலி மற்றும் படவுனின் டதாகஞ்ச் காவல் நிலையங்களில் இருந்து போலீஸ் குழுக்கள் உதவ சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெரிவித்துள்ளனர்.இறந்தவர்களின் மூன்று உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அப்பகுதியின் வட்ட அலுவலர் அசுதோஷ் சிவம் தெரிவித்தார்.

Also Read:WhatsApp : வாய்ஸ் நோட் “Transcription” அம்சத்தை அறிவித்த வாட்ஸ்அப்.. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன?

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைத்து துறைகளிலும் பலவித மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. அந்த வகையில் முன்பெல்லாம் ஏதேனும் ஒரு தெரியாத இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் போகும் வழியெங்கும் இருப்பவர்களில் பாதை சரியானதுதானா என கேட்டுக்கொண்டே செல்வோம். ஆனால் காலத்தின் மாற்றம் தற்போது கூகுள் மேப் இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு நல்லதோ அதே அளவுக்கு மோசமான சம்பவங்களும் நடைபெறுகிறது. பாதை சரியாக காட்டுகிறது என நம்பி சில நேரங்களில் தவறான பாதைக்கு சென்று விபத்து சந்திக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?
தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...
நடிகை டாப்ஸி பண்ணுவின் சினிமா பயணம்..!