Mohan Babu: செய்தியாளர்களை தாக்கிய விவகாரம்.. ஆடியோ வெளியிட்டு மோகன் பாபு வருத்தம்!
Mohan Babu Audio: நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்தநிலையில், டிவி9 செய்தியாளர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு மோகன் பாபு ஆடியோ வெளியிட்டு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் மீது நடிகரும், அரசியல்வாதியுமான மோகன் பாபு தாக்குதல் நடத்திய இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹைதராபாத்தில் தனது வீட்டிற்கு முன்பு நின்றிருந்த செய்தியாளர்களை துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தினார். இதையடுத்து, நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. மேலும், அந்த வீடியோ காட்சிகளில் செய்தியாளர்களின் மைக் மற்றும் கேமராவினை மோகன் பாபுவின் பவுன்சர்கள் பறித்தனர். அப்போது, டிவி9 செய்தியாளர்களுக்கு காயமும் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக டிவி9 செய்துயாளரை தாக்கிய விவகாரத்தில் மோகன் பாபு மீது காவல்துறையினர் கொலை முயற்சியின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் உத்தரவிட்டதையடுத்து, மோகன் பாபு இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மோகன் பாபு வருத்தம்:
இந்த நிலையில், டிவி9 செய்தியாளர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு மோகன் பாபு ஆடியோ வெளியிட்டு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த ஆடியோவில் நடிகர் மோகன் பாபு, “ உங்கள் குடும்ப பிரச்சனையில் யாராவது தலையிட முடியுமா என்று யோசியுங்கள். எல்லோர் வீட்டிலும் குடும்ப பிரச்சனைகள் இருக்கும். நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் விஷயங்கள் என்றால் இங்கு பெரியதாக்கி டிவியில் கொண்டு வந்துவிடுகிறார்கள். பத்திரிக்கை சகோதரர்கள் 4 நாட்களுக்கு மேலாக எங்கள் வீட்டின் முன் ஆட்களையும், வேன்களையும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு சரியானது. எனக்கும் என் மகனுக்கும் இடையேயான பிரச்சனையை நானே தீர்த்து கொள்கிறேன் என்று கூறினேன். பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். இரவு எத்தனை மணிக்கு என் மகன் மனோஜ்குமார் கேட்டை தள்ளிக்கொண்டு வந்தார். அதை பற்றி பிறகு பேசலாம்.
நடிகனாக, வித்யாலயா தலைமை ஆசிரியராக, ராஜ்யசபா உறுப்பினராக நான் எப்படிப்பட்டவன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இன்று இந்த ஊடக சகோதரர்கள் மிகவும் போலியானவற்றையும், என்னைப் பற்றியும் எவ்வளவு எதிர்மறையாகச் சொல்கிறார்கள். நான் அப்போது அவரக்ளை அடிக்கவோ திட்டவோ முயற்சிக்கவில்லை. அப்போது ஊடக நண்பர்கள் மைக்கை கொண்டு வந்து என் முகத்தில் வைத்தனர். கொஞ்சம் இருந்திருந்தால் என் கண்ணில் பட்டிருக்கும். அப்போது, கோபத்தில் அவரை கடுமையாக அடித்தேன்.
அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. அந்த ஊடக நண்பர் எனக்கு இளைய சகோதரர் போன்றவர். அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் நலமுடன் வாழ வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால், என் வலியை பற்றி யாருக்கு இங்கு கவலை இல்லை. வீட்டுக்குள் வந்தும் என் மன அமைதியை உடைத்தார்கள். என் மகனும் அதையே செய்தார்” என்றார்.
பெரியதாக மாற்றுகிறார்கள்:
தொடர்ந்து பேசிய அவர், “நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் 25 சதவிகிதம் இலவச கல்வியை வழங்க செலவு செய்துள்ளேன். என் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து பல ஐ.ஏ.எஸ்.கள் ஐ.பி.எஸ்.ஆகியுள்ளனர். நான் நேர்மையாக என் ஆயுள் முழுவதும் வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். எனக்கும் என் மகனுக்கு இடையிலான பிரச்சனை தீரும். எங்கள் சண்டைக்கு மற்றவர்கள் தலையிடுவதை விரும்பவில்லை. நான் பல சேவை திட்டங்களை செய்துள்ளேன். அதையெல்லாம் மறந்துவிட்டு நான் அடித்த விஷயத்தை பெரியதாக மாற்றுகிறார்கள்.
ஒரு நபராக நான் ஏற்படுத்திய காயத்திற்கு வருந்துகிறேன். அந்த இருளில் அவன் நிஜமாகவே பத்திரிக்கையாளனா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது.. இருட்டில் ஏதோ ஒன்று நடந்து விட்டது. நான் அடித்தது தவறுதான். ஆனால், எந்த சூழலில் அடிதேன் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். ஆனால் இங்கே ஒருதலைப்பட்சமான முடிவு எடுக்கப்படுகிறது.. பாருங்கள் மக்களே.. நான் செய்தது நியாயமா அநியாயமா.. என் வீட்டுக் கதவுகளை தாண்டி உள்ளே வந்தது நியாயமா அநியாயமா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.