5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காயத்தின் வலி எனக்கும் தெரியும்.. TV9 நிருபருக்கு நடிகர் மோகன் பாபு நேரில் ஆறுதல்!

Actor Mohan Babu : TV9 செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நடிகர் மோகன் பாபு மருத்துவமனைக்கே நேரில் சென்று ஆறுதல் கூறினார். தற்போது டி.வி9 செய்தியாளர் நலமுடன் உள்ளார்.

காயத்தின் வலி எனக்கும் தெரியும்.. TV9 நிருபருக்கு நடிகர் மோகன் பாபு நேரில் ஆறுதல்!
டி.வி 9 செய்தியாளருக்கு நடிகர் மோகன் பாபு ஆறுதல்
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 15 Dec 2024 18:28 PM

டி.வி9 செய்தியாளருக்கு நடிகர் மோகன் பாபு நேரில் ஆறுதல்: கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களிடம் மோதினார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க உள்ள பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, ஒரு நடிகர் பொது வெளியில் இப்படியா நடந்து கொள்வது என பொது மக்களிடமும் எதிர்ப்பை தூண்டியது. முதலில் இந்த விவகாரத்தில் நடிகர் மோகன் பாபு, தான் செய்தது தவறு இல்லை எனத் தெரிவித்தார். இதற்கிடையில், தாக்கப்பட்ட டிவி செய்தியாளருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நடிகர் மோகன் பாபு மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகளில் இறங்கியது. இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் மோகன் பாபு வருத்தம்

டி.வி 9 நிர்வாகத்தின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, நடிகர் மோகன் பாபு மனம் மாறினார். தொடர்ந்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தனது அடாவடி செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், தன்னால் காயமுற்ற டி.வி9 செய்தியாளர் ரஞ்சித்துக்கு ஆறுதல் கூறினார்.

Actor Mohan Babu

TV9 செய்தியாளர் ரஞ்சித் குடும்பத்துடன் நடிகர் மோகன் பாபு

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டி.வி செய்தியாளர் ரஞ்சித்தை நடிகர் மோகன் பாபு நேரில் சந்தித்தார். அப்போது, நடந்த சம்பவம் குறித்த அவரிடம் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தார். மேலும், அவரின் குடும்பத்தினருடன் வருத்தம் தெரிவித்தார். செய்தியாளர் ரஞ்சித் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க : Actor Mohan Babu: டிவி 9 பத்திரிகையாளர் மீது நடிகர் மோகன் பாபு தாக்குதல்.. ஹைதராபாத்தில் பரபரப்பு

அன்று நடந்தது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் மோகன் பாபு, செய்தியாளர்களிடம் கோபமாக நடந்து கொண்டார். இதில், அவரின் தனிப்பட்ட தாக்குதல் காரணமாக, டி.வி 9 செய்தியாளர் ரஞ்சித்துக்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை சக செய்தியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் கணப்படுகிறார்.
இந்தச் சம்பவம் தெலுங்கு பத்திரிகையாளர் மட்டுமின்றி நாடு முழுக்க பத்திரிகையாளர்கள் போராட்டத்தை தூண்டியது. இதனால், நடிகர் மோகன் பாபுவுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் அறிவித்தனர்.

நேரில் வருத்தம்

இந்தப் போராட்ட அறிவிப்புக்கு பின்னர் கடந்த கால அறிக்கைகளை வாபஸ் பெறுவது போல் நடிகர் மோகன் பாபுவின் நடவடிக்கை அமைந்தது. தொடர்ந்து தனது நடவடிக்கை குறித்து பொது வெளியில் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் செய்தியாளர் ரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்தினரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நடிகர் மோகன் பாபு வருத்தம் தெரிவித்துள்ளார். அப்போது, காயத்தின் வலி எனக்கும் தெரியும் எனத் தெரிவித்துள்ளார் எள்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Mohan Babu: செய்தியாளர்களை தாக்கிய விவகாரம்.. ஆடியோ வெளியிட்டு மோகன் பாபு வருத்தம்!

Latest News