கணவரை கடைசியாக பார்க்க முடியாத சோகம்.. விமான ஸ்டிரைக்கால் மனைவிக்கு நடந்த சோகம் - Tamil News | | TV9 Tamil

கணவரை கடைசியாக பார்க்க முடியாத சோகம்.. விமான ஸ்டிரைக்கால் மனைவிக்கு நடந்த சோகம்

Updated On: 

14 May 2024 19:40 PM

ஒருமுறையாவது கணவரை பார்க்க வேண்டும் என்ற மனைவி அமிருதாவின் ஆசை விமான ஊழர்களின் வேலை நிறுத்தத்தால் நிறைவேறாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

கணவரை கடைசியாக பார்க்க முடியாத சோகம்.. விமான ஸ்டிரைக்கால் மனைவிக்கு நடந்த சோகம்

உயிரிழந்த நபர்

Follow Us On

கணவரை ஒருமுறையாவது பார்க்க விரும்பிய மனைவி:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நம்பி ராஜேஷ் (40). இவர் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் ஆசியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள்  கேரளாவில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஓமனில் உள்ள நம்பி ராஜேஷ்க்கு கடந்த 7ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்ட்டு வந்தது. இவரது உடல்நிலை மோசமாக இருப்பதால், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை அங்கிருந்த மருத்துவர்களிடமும் கூறியிருக்கிறார். இதனிடையே, கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் கேரளாவில் உள்ள அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மனைவி அமிருதாவும் ஓமனில் உள்ள கணவரை பார்ப்பதற்காக  கடந்த 8ஆம் தேதி ஓமன் செல்ல டிக்கெட் பதிவு செய்திருந்தார். அந்த நாளில் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்திருந்தனர். இதனால், 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

உயிரிழந்த ஓமனில் இருந்த  கணவர்:

இதில், கேரளாவில் இருந்து மஸ்கட் செல்லவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதை பற்றி தெரியாத அம்ருதா மஸ்கட் செல்ல விமான நிலையத்திற்கு வந்து ஏமாற்றம் அடைந்தார். இதனால் விமான நிலைய ஊழியர்களிடம் தன்னுடை எடுத்து கூறி டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்று முறையிட்டுள்ளார். இதனை அடுத்து, கடந்த 9ஆம் தேதி மஸ்கட் செல்ல ஏர் இந்தியா விமானமும் டிக்கெட் புக் செய்துள்ளது.

அன்றைய நாளும்  விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.   இதனை தொடர்ந்து, அடுத்த நாள் விமான ஊழயர்களின் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அன்றைய தினம் மஸ்கட் செல்ல டிக்கெட் போட முயற்சித்திருக்கிறார். ஆனால், அன்றைக்கு அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.  இதற்கிடையில், மஸ்கட்டில் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நம்பி ராஜேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதனை தனக்கு மனைவிக்கு போன் செய்து கூறியிருக்கிறார். மனைவியிடம் பேசிய சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கணவர் உயிரிழந்த  தகவலை அறிந்த மனைவி அமிருதா கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். கடைசியாக ஒருமுறையாவது கணவரை பார்க்க விரும்பிய மனைவி அமிருதாவின் ஆசை விமான ஊழர்களின் வேலை நிறுத்தத்தால் நிறைவேறாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version