“அசைவம் சாப்பிடக் கூடாது” டார்ச்சர் செய்த காதலன்.. விபரீத முடிவு எடுத்த பெண் விமானி!

Crime News : மும்பையில் ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் விமானி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசைவம் சாப்பிடக் கூடாது டார்ச்சர் செய்த காதலன்.. விபரீத முடிவு எடுத்த பெண் விமானி!

பெண் விமானி (picture credit : Twitter)

Updated On: 

28 Nov 2024 14:55 PM

மும்பையில் ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் விமானி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பெண் விமானிடம் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் அவர் மன உளைச்சல் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கோரப்பூர் பகுதீயைச் சேர்ந்தவர் 25 வயதான சிருஷ்டி துலி. இவர் ஏர் இந்திய விமான நிலையத்தில் விமானியாக பணிபுரிந்து வந்தார். இவர் கோரப்பூரைச் சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையையும் பெற்றவர்.

பெண் விமானி எடுத்த விபரீத முடிவு

இவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.இவர் சம்பந்தன்று காலை 3 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிருஷ்டி துலி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விமானி படிப்பிற்காக சிருஷ்டி துலி விமான பயிற்சிக்கு சென்றபோது ஆதித்யா பண்டிட் (27) என்பவரை சந்தித்துள்ளார். அப்போது, இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

அந்த இரண்டு ஆண்டு பயிற்சி முடிந்த பிறகு சிருஷ்டி துலி மும்பைக்கு சென்றிருக்கிறார். அப்போது ஆதித்யா பண்டிட்டுன் ஒரே வீட்டில் அவர் வசித்து வந்திருக்கிறார்.  டெல்லிக்கு அருகிலுள்ள ஃபரிதாபாத்தில் வசிக்கும் ஆதித்யா அடிக்கடி மும்பைக்கு சென்று சிருஷ்டியுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில், சிருஷ்டி துலி தற்கொலை செய்து கொள்வதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு வரை இருந்துள்ளார். எனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

Also Read : ஜார்க்கண்ட் மாநிலத்தின் 14 வது முதல்வர்.. இன்று மாலை பதவியேற்கும் ஹேமந்த் சோரன்..

அதாவது, பொது இடங்களில் சிருஷ்டி துலியை அசிங்கப்படுத்துவது, அசைவம் உணவு சாப்பிடக் கூடாது என்றும் வற்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது வாழ்க்கைக்கு முறைக்கு ஏற்பட சிருஷ்டியை மாற்றிக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். சிறுசிறு விஷயங்களுக்கான சிருஷ்டியிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அதிர்ச்சி காரணம்

அதாவது, ஷாப்பிங் செய்வதற்காக இருவரும் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது அப்போது ஏற்பட்ட சண்டையால் சிறிய விபத்து நடந்திருக்கிறது. இதனால் சிருஷ்டியை, ஆதித்யா நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி பல பிரச்னைகள் இருந்தபோதிலும் சிருஷ்டியை அந்த உறவிலேயே இருந்துள்ளார்.

மேலும், தனது சகோதரி திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சிருஷ்டியை அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு மறுத்த சிருஷ்டியை அவர் வாட்ஸ் அப்பில் பிளாக் செய்திருக்கிறார். இப்படி அடிக்கடி ஏற்பட்ட சண்டையால்  சிருஷ்டி துலி மன உளைச்சலில் சில மாதங்களாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

மன உளைச்சலில் இருந்த அவர், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே, காதலன் கொடுத்த கொடுமைமையால் பெண் விமானி சிருஷ்டி துலி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதனை அடுத்து போலீசார் ஆதித்யா பண்டிடை  கைது செய்தனர்.

Also Read : முதல் தேர்தலே வெற்றி.. எம்.பியாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி..

அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, நவம்பர் 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காதலன் கொடுமையால் பெண் விமானி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?