அமித்ஷா போலி வீடியோ! தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!

மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது போன்று எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அமித்ஷா போலி வீடியோ! தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!

ரேவந்த் ரெட்டி

Updated On: 

28 Nov 2024 11:19 AM

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, கேரளாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஆந்திரா, தெலங்கானாவில் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

எடிட் செய்யப்பட்ட அமித்ஷா வீடியோ?

தொடர்ந்து மூன்றாவது ஆட்சி கட்டிலில் அமர பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது பாஜக.

இந்த நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்ற எடிட் செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், எஸ்சி/எஸ்டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித்ஷா பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில்  வெளியானது. ஆனால், அமித்ஷா இப்படி பேசவில்லை என்றும், இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும் உள்துறை அமைச்சகம் புகார் அளித்தது.

இந்த புகாரின்பேரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153ஏ, 465, 468, 171 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66சி கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீடியோவை பகிர்ந்த கணக்குகளின் தகவல்களை கோரி எக்ஸ் மற்றும் பேஸ்புக்கிற்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மே 1ஆம் தேதிக்குள் பதலளிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

தெலங்கானா முதல்வருக்கு சம்மன்:

இந்த நிலையியில் தான், மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்ற எடிட் செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி டெல்லி காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் அமித் மால்வியா கூறுகையில், “உள்துறை அமைச்சர் ஷா, மதத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்குவது பற்றி மட்டுமே பேசினார்” என்று விளக்கினார்.

இதற்கு பதிலடி அளித்த தெலங்கானா முதல்வர், “சிபிஐ, அமலாக்கத்துறை பயன்படுத்தி வருகின்றனர். இப்போது டெல்லி போலீசாரை பயன்படுத்துகின்றனர். ஆனால், யாருக்கும் பயப்பட மாட்டோம்” என்றார்.

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..