Wayanad Landslide: ” நிலச்சரிவு ஏற்படும் என முன்கூடியே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது” – அமித்ஷா விளக்கம்..
நேற்று முன் தின்ம் இரவு நேரத்தில் வயநாடு பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆற்றுப்பாலம், வீடுகள், கடைகள் என அந்த இடம் இருந்த தடையமே தெரியாமல் பூமிக்குள் புதைந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அங்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவ வீரர்கள், கடற்படை என அனைவரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவு குறித்து அமித்ஷா கருத்து: கேரளா மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் கேரளா மாநிலத்திற்கு கடந்த 23 ஆம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக மாநிலங்களவையில் அமித்ஷா விளக்கமளித்துள்ளார். கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி வரும் நிலையில் பல பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. முக்கியமாக நேற்று முன் தின்ம் இரவு நேரத்தில் வயநாடு பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆற்றுப்பாலம், வீடுகள், கடைகள் என அந்த இடம் இருந்த தடையமே தெரியாமல் பூமிக்குள் புதைந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அங்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவ வீரர்கள், கடற்படை என அனைவரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah says, “My condolences to the bereaved families… I want to clarify something for the country… They kept on talking about early warning. I want to clarify that on July 23, the government of India gave an early warning to the… pic.twitter.com/pyi8WCFPq2
— ANI (@ANI) July 31, 2024
இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள அரசுக்கு நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. ஒன்பது தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவிற்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டன. ஆனால் கேரளா அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இயற்கை பேரிடர் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே வழங்கும் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
மேலும் படிக்க: இனி வங்கிகளில் கிளர்க் வேலை இல்லாமல் போய்விடும்.. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
கேரளா அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். வயநாடு நிலச்சரிவை சமாளிக்க கேரள அரசு மற்றும் மக்களுடன் மத்திய அரசு உறுதுணையாக நிற்கிறது” என தெரிவித்தார்.