5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“அருவருப்பா இருக்கு” காங்கிரஸ் தலைவர் கார்கே மீது அமித் ஷா கடும் விமர்சனம்!

பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை என் உயிர் போகாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். வெறுப்பாகவும், அருவருப்பமாகவும், அவமானகரமாகவும் கார்கே பேசியுள்ளதாக அமித் ஷா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

“அருவருப்பா இருக்கு” காங்கிரஸ் தலைவர் கார்கே மீது அமித் ஷா கடும் விமர்சனம்!
கார்கே – அமித் ஷா (picture credit: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Sep 2024 14:02 PM

பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை என் உயிர் போகாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, “நேற்று, காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ மல்லிகார்ஜுன் கார்கே நேற்று தனது பேச்சின் மூலம் அவரையும் அவரது தலைவர்களையும் அவரது கட்சியையும் மிஞ்சும் அளவுக்கு முற்றிலும் வெறுப்பாகவும், அருவருப்பமாகவும், அவமானகரமாகவும் பேசியுள்ளார். வெறுப்பின் உச்சமாக, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகுதான் நான் இறப்பேன் என்று கூறி தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களில் பிரதமர் மோடியை இழுத்தார்.

அமித் ஷா பதிலடி:

இது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் மோடியின் மீது எவ்வளவு வெறுப்பும் பயமும் கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. மேலும், பிரதமர் மோடிக்கு பயந்து அவரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

Also Read: ஆயுத பூஜை, தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கார்கேவின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அவருக்காக மோடி பிரார்த்தனை செய்கிறார். நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர் நீண்ட, ஆரோக்கியமாக வாழ நாம் அனைவரும் பிரார்த்திக்கிறோம். அவர் பல்லாண்டு காலம் வாழட்டும், 2047க்குள் விக்சித் பாரதம் உருவாகும் வரை வாழட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கார்கே சொன்னது என்ன?

ஜம்மு காஷ்மீரில் இறுதிக் கட்ட சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜஸ்ரோடா பகுதியில் நேற்று காங்கிரஸ் பிரச்சார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். அப்போது பொதுக் கூட்டத்தின் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கார்கே திடீரென மயக்கம் அடைந்துள்ளார்.

இதனால் தடுமாறிய அவரை பிற தலைவர் தாங்கி பிடித்து கொண்டனர். பின்னர், அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கார்கே உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார். இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அவர் பேசுகையில், “ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை போராடுவோம். எனக்கு 83 வயது ஆகுகிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டேன். பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றும் வரை என் உயிர் போகாது. மக்களுக்கான எனது பேராட்டம் தொடரும்” என்று பேசியிருந்தார்.


இதனிடையே மல்லிகார்ஜுன கார்கேயை தொலைபேசியில் தொடர்கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். கார்கேவை தொடர் கொண்ட பிரதமர் மோடி, அவரிடம் நலம் விசாரித்தார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரதமர் மோடி வாழ்த்து கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில், இன்று கார்கேவின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

Also Read: அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. தடுப்பு நடவடிக்கைகளை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்..

ஜம்மு காஷ்மீரில் நாளை இறுதிக் கட்ட தேர்தல்:

ஜம்மு காஷ்மீரில் நாளை இறுதிக் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. இங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. இதனை அடுத்து கடந்த 25ஆம் தேதி 26 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்தது. இந்த நிலையில், நாளை எஞ்சி இருக்கும் 40 தொகுதிகளுக்கு நாளை இறுதி கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

Latest News