Tamilisai : தமிழிசையை மேடையில் அழைத்து கண்டித்தாரா அமித்ஷா? வைரலாகும் வீடியோ!
Amit Shah Video : ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார்.இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், விழா மோடையில் அமித் ஷா மற்றும் தமிழிசை இடையேயான உரையாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விழா மேடையில் வணக்கம் சொல்லி செல்லும் தமிழிசை சௌந்தரராஜனை அழைக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முகத்தை கோபமாக வைத்து கொண்டு ஏதோ கண்டிப்பது போல பேசுவதாக தெரிகிறது.
தமிழிசை சவுந்தரராஜன் : ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனை அடுத்து, ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல அரசியில் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், விழா மோடையில் அமித் ஷா மற்றும் தமிழிசை இடையேயான உரையாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: “பவன் கல்யான் எனும் நான்” அமைச்சராக பதவியேற்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார்!
அந்த வீடியோவில், விழா மேடையில் வணக்கம் சொல்லி செல்லும் தமிழிசை சௌந்தரராஜனை அழைக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முகத்தை கோபமாக வைத்து கொண்டு ஏதோ கண்டிப்பது போல பேசுவதாக தெரிகிறது. அதற்கு விளக்கமளிக்க முயற்சிக்கும் தமிழிசை சௌந்தரராஜனிடம் இல்லை.. இல்லை.. என விரல்களை நீட்டிக் கூறுவது போல் வீடியோவில் தெரிகிறது. இருப்பினும், விழா மேடையில் தமிழிசையிடம் அமித் ஷா என்ன பேசினார் என்ற தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழிசை செளந்தரராஜனை மேடையில் அழைத்து பேசிய அமித்ஷா.. வைரல் வீடியோ#TamilisaiSoundararajan #bjp pic.twitter.com/3ihS2ElTwa
— TV9 Tamil (@TV9Tamil) June 12, 2024
முன்னதாக, கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ”நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் நான் தலைவராக இருந்தபோது கட்டுப்பாடு இருந்தது. சமுக விரோத ரவுடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன். இப்போது அப்படில் இல்லை” என பேசினார். தமிழிசையின் பேச்சு அரசியில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இப்படியான சூழலில், தமிழிசையை அமித் ஷா கண்டித்தது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
Also Read: சந்திரபாபு நாயுடு 4.0.. ஆந்திர முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார்!