5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”பாஜக ஆட்சி அமைக்கலன்னா அமித்ஷாவுக்கு சந்தோஷம்” ப.சிதம்பரம்!

அமித் ஷாவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ”77 வயது காரணமாக நவீன் பட்நாயக் ஓய்வு பெற வேண்டும் என்று அமித் ஷா கூறுகிறார். ​​பிரமதர் மோடிக்கு (73 வயது, 7 மாதங்கள்) என மறைமுக அறிவுரையா? பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால், அமித் ஷா தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். மோடிக்கு பதில், அமித் ஷா எதிர்க்கட்சி தலைவராக அமருவார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

”பாஜக ஆட்சி அமைக்கலன்னா அமித்ஷாவுக்கு சந்தோஷம்” ப.சிதம்பரம்!
ப.சிதம்பரம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 May 2024 13:43 PM

அமித்ஷாவுக்கு ப.சிதம்பரம் பதிலடி: நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள இரண்டு கட்ட வாக்குப்பதிவு மே 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதி நடக்கிறது. இதனால், அரசியல் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறை பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்கள் பறிகப்படும் என்றும் ஊடுருவல்கார்களுக்கு வழங்கப்படும் எனவும் ராமர் கோயில் இடிக்கப்படும் என்றும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ஒடிசாவில் தேர்தல் பரப்புரையில் பேசிய உள்துறை அமித்ஷா, “நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி அரசால் அழிக்கப்பட்ட ஒடிசாவின் பெருமையை பாஜக மீட்டெடுக்கும். 77 வயதாகும் நவீன் பட்நாயக் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வு பெற வேண்டும். ஐந்து கட்ட மக்களவைத் தேர்தலின் முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கனவே 310 இடங்களைக் கைப்பற்றிவிட்டது” என்றார்.

Also Read: பாஜக எத்தனை இடங்களில் வெல்லும்? அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்!

மோடிக்கு மறைமக அறிவுரையா?

இந்த நிலையில், அமித் ஷாவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ”77 வயது காரணமாக நவீன் பட்நாயக் ஓய்வு பெற வேண்டும் என்று அமித் ஷா கூறுகிறார். ​​பிரமதர் மோடிக்கு (73 வயது, 7 மாதங்கள்) என மறைமுக அறிவுரையா? பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால், அமித் ஷா தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். மோடிக்கு பதில், அமித் ஷா எதிர்க்கட்சி தலைவராக அமருவார்” என்று குறிப்பிட்டிருந்தார்.


மேலும், பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ”அடுத்த இரண்டு கட்ட தேர்லில் பாஜகவின் இலக்கான 400 இடங்களை பெறும். நவீன் பட்நாயக் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், 1.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். பூரி ஜெகனாதர் கோயிலின் கருவூலகத்தின் சாவி எங்கே என்று நவீன் பட்நாயக்கிடம் கேட்க விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் அவர் ஏன் நீதித்துறை கமிஷன் அறிக்கையை வெளியிடவில்லை?  பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சாவி காணாமல் போனதற்கு காரணமானவர்களைத் தண்டிப்போம். ஒடிசாவின் பெருமை, மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிஜேடி அரசாங்கம் அவமதிக்கிறது. ஒடிசாவின் விரைவான வளர்ச்சி மற்றும் வளமான கலாச்சாரத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக ஒடிசா மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Also Read : “ஒடிசாவை தமிழர் ஆளலாமா?” பொங்கி எழுந்த அமித் ஷா!

Latest News