Ganesh Chaturthi: விநாயகருக்கு ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்க கிரீடம்.. ஆனந்த் அம்பானியின் தனித்துவமான பரிசு..
ஆனந்த் அம்பானிக்கு லால்பாக்சா ராஜா சர்வஜனில் கணேஷ் உத்சவ் மண்டல் கவுரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. லால்பாக்சா ராஜா கமிட்டியின் நிர்வாக ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது லால்பாக்சா ராஜாவுக்கும் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கும் இடையே உள்ள வலுவான உறவை எடுத்துக்காட்டுகிறது .
மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு மும்பையின் லால்பாக்சா ராஜாவுக்கு (விநாயகருக்கு) 20 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தை பரிசாக அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது . மும்பையின் லால்பாக்சா ராஜாவின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 5 அன்று வெளியிடப்பட்டது. விநாயகப் பெருமான் லால்பாக்சாவில் உள்ள சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து தங்க கிரீடத்தை அலங்கரிப்பதைக் காணலாம்.இந்த அற்புதமான தங்க கிரீடத்தை உருவாக்க இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆனது என்று கூறப்படுகிறது. அனந்த் அம்பானியின் மகத்தான பங்களிப்பு, லால்பாக்சா ராஜாவுடனான அவரது உறவைப் பிரதிபலிக்கிறது. முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் லால்பாக்சா ராஜாவுடன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நட்புறவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#AnantAmbani has shown an incredible gesture of devotion by donating a 20 Kg Gold crown worth ₹15 crore to #Mumbai’s #LalbaugchaRaja , unveiled ahead of the #GaneshChaturthi festival.
This contribution has been done through the #Reliance Foundation. pic.twitter.com/BPgoMbVFIU
— Neetu Khandelwal (@T_Investor_) September 6, 2024
விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல், அவர் லால்பாக்சா ராஜாவின் பல்வேறு முயற்சிகளில் கலந்துக்கொண்டுள்ளார். இவற்றை தவிர, கொரோனா தொற்றுநோய்களின் போது நிதி உதவியாக அவர் 24 டயாலிசிஸ் இயந்திரங்களை லால்பாச்சா கமிட்டிக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. லால்பாக்சா ராஜா கணேஷோத்சவ் மண்டல் மற்றும் கிர்கான் சௌப்பட்டி கடற்கரையில் நடந்த விழாவிலும் அவர் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் அம்பானிக்கு லால்பாக்சா ராஜா சர்வஜனில் கணேஷ் உத்சவ் மண்டல் கவுரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. லால்பாக்சா ராஜா கமிட்டியின் நிர்வாக ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது லால்பாக்சா ராஜாவுக்கும் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கும் இடையே உள்ள வலுவான உறவை எடுத்துக்காட்டுகிறது .
Also Read: விசாரணை வளையத்தில் மகாவிஷ்ணு.. சென்னையில் காலடி எடுத்து வைத்தவுடன் கைது செய்த போலீஸ்..
வழக்கம் போல், இந்த ஆண்டும், லால்பாக்ச ராஜா பொது கணேஷோத்ஸவ மண்டலம், லால்பாக்ச ராஜாவின் கணேஷோத்ஸவத்தை செப்டம்பர் 7, 2024 சனிக்கிழமை முதல் செப்டம்பர் 17, 2024 செவ்வாய்க் கிழமை வரை கொண்டாடுகிறது.
1934 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புட்லபாய் சாலில் உள்ள லால்பாக்சா ராஜா சர்வஜனிக் கணேஷோத்ஸவ் மண்டலத்தின் புகழ்பெற்ற விநாயகர் சிலைதான் லால்பாக்ச ராஜா. எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக காம்ப்ளி குடும்பம் லால்பாக்சா ராஜா விநாயகர் சிலையை பராமரித்து வருகிறது. இந்த ஆண்டு 10 நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் நிலையில், கம்பீரமான லால்பாக்சா விநாயகர் சிலை செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
லால்பாக்சா ராஜாவின் தரிசன நேரங்கள் இதோ:
- தரிசனம்: 5:00 AM – 11:00 PM
- காலை பூஜை: 6:00 AM – 7:00 AM
- மதியம் பூஜை: 1:00 PM – 2:00 PM
- மாலை பூஜை: 7:00 PM – 8:00 PM
- காலை ஆரத்தி: 7:00 AM – 7:15 AM
- மதியம் ஆரத்தி: 1:00 PM – 1:15 PM
- மாலை ஆரத்தி: 7:00 PM – 7:15 PM