Anant Ambani-Radhika Wedding: ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண கொண்டாட்டம்… கலகல வீடியோ! - Tamil News | | TV9 Tamil

Anant Ambani-Radhika Wedding: ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண கொண்டாட்டம்… கலகல வீடியோ!

Published: 

04 Jul 2024 11:27 AM

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா இருவருக்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முகேஷ் அம்பானி- நீடா அம்பானிக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லோகா மேத்தாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இதில், இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற உள்ளது

Anant Ambani-Radhika Wedding: ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண கொண்டாட்டம்... கலகல வீடியோ!

ஆனந்த் அம்பானி

Follow Us On

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண கொண்டாட்டம்: ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா இருவருக்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முகேஷ் அம்பானி- நீடா அம்பானிக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லோகா மேத்தாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இதில், இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற உள்ளது. ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் – ஷைலாவின் மகள் ராதிகா, இவர் நியூயார்க் பல்கலையில் பட்டம் பெற்றவர். ஆனந்த் அம்பானி, தன்னுடன் படித்த ராதிகா மெர்சன்டை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜூலை 12ல் திருமணம் நடக்க உள்ள நிலையில், ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, திருமணத்திற்கு முன்பு ஏழை பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த 50 ஜோடிகளுக்கு முகேஷ் அம்பானி நேற்று மாலை இலவச திருமண செய்து வைத்தார். இத்திருமணத்தில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிதா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோ வைரல்:


ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மும்பையில் உள்ள அவர்களது காஸ்ட்லியான அன்டாலியா வீட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவுடன் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தின் சடங்குகள் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் அன்டாலியா வீடு சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனந்த்ம மற்றும் ராதிகா ஆகியோர் மேடையில் நிற்கின்றனர். அப்போது ஏராளமான விருந்தினர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்.

 

இந்த விருந்தினர் கூட்டத்திற்கு மத்தியில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி உள்ளனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் பிரமாண்டமான முறையில் திருமணத்திற்கு முந்தைய விருந்து என கொடுத்து உலக தலைவர்களை அனைவரையும் முகேஷ் அம்பானி வரவழைத்தார். அதன்பிறகு, மணமகன் ஆனந்த் அம்பானி சொகுசு கப்பலில் தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை… எல்.கே அத்வானி உடல்நிலை எப்படி இருக்கு?

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version