வாக்குப்பதிவின்போது அரங்கேறிய அசம்பாவிதங்கள்.. ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்குசேதம் கட்சி தொண்டர்களிடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின்போது அரங்கேறிய அசம்பாவிதங்கள்.. ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திரா தேர்தலில் மோதல்

Updated On: 

13 May 2024 15:38 PM

ஆந்திரா தேர்தலில் வெடித்த மோதல்:

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பல இடங்களில் மோதல் வெடித்துள்ளது. அதாவது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. அன்னமய்யா மாவட்டம், புல்லாம்பேட்டையில் வாக்கு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. தாகேபள்ளி, கேசனப்பள்ளி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் கடும் பதற்றம் ஏற்பட்டது. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்வது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு சேதம் இடையே மோதல் வெடித்ததில் பலரும் காயம் அடைந்தனர்.

Also Read : சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 87.98% மாணவர்கள் தேர்ச்சி!

வாக்காளரை தாக்கிய எம்.எல்.ஏ:

மேலும், தெனாலியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சிவக்குமார் அங்கு வந்த வாக்களருடான தகராறில் ஈடுபட்டிருக்கிறார். வரிசையில் நிற்பது தொடர்பாக வாக்களருக்கு, எம்ஏல்ஏ சிவக்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், வாக்களரும், எம்எல்ஏ சிவக்குமாரும் ஒருவரைக்கொருவர் வாக்குச்சாவடியில் சரமாரியாக தாக்கி உள்ளனர். வாக்காளர் மீது எம்எல்ஏ சிவக்குமார் தாக்கியது தொர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும், புல்லாம்பேட் மண்டலத்தில் வாக்கு இயந்திரங்களை உடைத்தாகவும் சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


இதோடு இல்லாமல் கடப்பா மாவட்டத்தில் இருதரப்பினரும் ஒருவரைக்கொருவர் தாக்கி கொண்டதில் பலரும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மைதுகுருவில் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர் தாக்கப்பட்டுள்ளார். மேலும், தெலுங்கு தேசம் கட்சி தனது 15 வாக்குச்சாவடி முகவர்கள் கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளது. புங்கனூர் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றபோது தெலங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களில் 15 பேர் காரை வைத்து கடத்தப்பட்டாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெலுங்கு தேசம் புகார் அளித்துள்ளது. எனவே, ஆந்திராவில் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

Also Read : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டம்… 100 பேர் காயம்..என்ன நடக்கிறது?

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்