5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Andhra Assembly Election Results: ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு ஆட்சி.. படுதோல்வியில் ஜெகன் கட்சி!

Andhra Assembly Election: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு சேதம் கட்சி 122 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கூட்டணி கட்சியான பாஜக 6 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது ஆட்சியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், சந்திரபாபு தலைமையிலான அரசு அமையும் சூழல் உருவாகி உள்ளது. ஜெகன் மோகன் பெருத்த தோல்வியை சந்தித்து வருகிறார். சந்திரபாபு நாயுடு 11, 738 வாக்குகள் பெற்றுள்ளார். எனவே, சுமார் 1,934 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரபாபு நாயுடு முன்னிலை வகித்து வருகிறார்.

Andhra Assembly Election Results: ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு ஆட்சி.. படுதோல்வியில் ஜெகன் கட்சி!
ஆந்திரா தேர்தல்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jun 2024 16:40 PM

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவில் ட்ரெண்ட் நொடிக்கு நொடி மாறி வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 297 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி கடும் சவால் அளித்து வருகிறது. கருத்துக்கணிப்புகளுக்கு நேர் எதிர் மாறாக தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 227 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்த இரண்டு கூட்டணி இடம் பெறாத மற்ற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: Tamil Nadu Election Result 2024 LIVE : தமிழ்நாட்டில் முன்னிலை வகிக்கும் திமுக… மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேரலை

அதில் குறிப்பாக நமது அண்டே மாநிலமான கர்நாடகாவில் கடும் போட்டி நிலவும் எதிர்பார்ப்பட்ட நிலையில், அதற்கு நேர் மாறாக இருக்கிறது. ஆந்திராவில் ஒரே கட்டமாக 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 13ஆம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய 2024 சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே களம் கண்டது. தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் இணைந்து நின்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 இடங்களிலும், தெலுங்குதேசம் 144, ஜனசேனா 21, பாஜக 10 இடங்களில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 159, சிபிஎம் 8, சிபிஐ 8 இடங்களிலும் போட்டியிட்டன.

இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு சேதம் கட்சி 162 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது ஆட்சியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 13 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், சந்திரபாபு தலைமையிலான அரசு அமையும் சூழல் உருவாகி உள்ளது. ஜெகன் மோகன் பெருத்த தோல்வியை சந்தித்து வருகிறார். சந்திரபாபு நாயுடு 11, 738 வாக்குகள் பெற்றுள்ளார். எனவே, சுமார் 1,934 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரபாபு நாயுடு முன்னிலை வகித்து வருகிறார்.

முன்னதாக 2019 நடந்த தேர்தலில் 151 இடங்களில் வென்று முதல் முறையாக ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார். சந்திரபாபு நாயுடு கட்சிக்கு 23 இடங்களில் தான் வென்றது. ஆந்திராவை கோட்டையாக வைத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Lok Sabha Election 2024 Live Counting and Result: முன்னிலையில் பாஜக.. விறுவிறு வாக்கு எண்ணிக்கை

Latest News