5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மார்பிங் போட்டோ.. ரூ.2,000 கடனுக்கு டார்ச்சர்.. விபரீத முடிவு எடுத்த இளைஞர்!

Andhra Pradesh Crime News : ஆந்திராவில் ஆன்லைன் கடன் செயலியில் ரூ.2,000 பணம் வாங்கிய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய நிலையில், இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மார்பிங் போட்டோ.. ரூ.2,000 கடனுக்கு டார்ச்சர்.. விபரீத முடிவு எடுத்த இளைஞர்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Dec 2024 14:27 PM

ஆந்திராவில் ஆன்லைன் கடன் செயலியில் ரூ.2,000 பணம் வாங்கிய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய நிலையில், இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திரா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன் (25). இவரது மனைவி அகிலா. இந்த தம்பதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்த நரேந்திரன் மீனவராக உள்ளார். மழை காரணமாக இவராக கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டு செலவுக்கு போதுமான பணம் இல்லாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

ஆன்லைன் செயலில் ரூ.2,000 கடன்

இதனால் குடும்ப செலவுக்காக நரேந்திரன் ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.2000 கடனாக வாங்கியுள்ளார். இந்த பணத்தை சில நாட்களுக்கு பிறகு செலுத்தியுள்ளார். இருப்பினும், அவருக்கு கூடுதல் பணத்தை செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழைப்புகள் வந்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து, மனைவியின் புகைப்படங்களை மார்பிங் செய்து அனுப்பி மிரட்டியுள்ளனர்.

மேலும், மார்பிங் புகைப்படங்களை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளனர். மேலும், பெண் அகிலாவின் போன் நம்பருக்கு மார்பிங் புகைப்படங்களை அனுப்பி பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் அவர்கள் கேட்ட தொகையை செலுத்த முடிவு செய்த தம்பதி, நரேந்திரனை அவரது நண்பர்கள் அழைத்து இதுபற்றி விசாரித்தாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த நநேரத்திரன், தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணமான 6 ஆறு மாதங்களிலேயே இளைஞர் நரேந்திரன் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : மனைவி டார்ச்சர்.. விபரீத முடிவு எடுத்த ஐடி ஊழியர்.. அறையில் கிடந்த 24 பக்க கடிதம்!

தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் ஒரு வாரத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் பதிவாகி உள்ளது. நந்தியால் மாவட்டத்தில் கடன் முகவர்களின் துன்புறுத்தலை எதிர்கொண்ட இளம்பெண் தற்கொலை முயன்றார். மேலும், குண்டூரல் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பெண் அகிலா, “தொல்லை மற்றும் சித்ரவதை சாதாரணமானது அல்ல. எனது படங்களை மார்பிங் செய்து எனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் சித்ரவதையை எனது கணவரால் தாங்க முடியவில்லை. எங்களுக்கு காதல் திருமணம். கடந்த மாதம் தான் திருமணம் நடந்தது. நாங்கள் கடனை திருப்பிச் செலுத்திவிட்டோம்.

Also Read : ஜக்தீப் தங்கருக்கு எதிராக தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் செக்மேட்.. அரசியலமைப்பு விதி என்ன?

ஆனாலும் அவர்கள் எங்களை தொந்தரவு செய்தார்கள். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை எளிதான நடக்கிறது.. அதே நேரத்தில் கடன் பெறும் வசதியும் ஆன்லைனில் உள்ளது. இதற்காக பல செயலிகள் உள்ளன.

இந்த ஆன்லைன் கடன் செயலிகள்  காரணமாக பலரும் உயிரிழந்து வருகின்றனர். அதாவது, கடனாக வாங்கிய தொகையை விட கூடுதலாக கடன் செயலி முகவர்கள் கேட்டு துன்புறுத்தி வருகின்றனர்.  மேலும், பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல உயிரிழப்புகள் நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

Latest News