5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்” உதயநிதி மீது பவன் கல்யாண் மறைமுக விமர்சனம்!

சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது. அழிக்க நினைத்தால் நீங்கள் அழிந்து போவீர்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில பேசிய பவன் கல்யாண், "சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால், நீங்கள் அழிந்து போவீர்கள். ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன்" என்று மறைமுகமாக உதயநிதியை விமர்சித்தார் பவன் கல்யாண்.

“சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்” உதயநிதி மீது பவன் கல்யாண் மறைமுக விமர்சனம்!
பவன் கல்யாண் – உதயநிதி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Oct 2024 08:39 AM

சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது. அழிக்க நினைத்தால் நீங்கள் அழிந்து போவீர்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில் மாட்டு கொழுப்பு கலந்து இருப்பதாக வெளியான தகவல் பெரும் பிரச்னையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விரதம் இருந்து திருப்பதி எழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று திருப்பதியில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த பொதுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

“சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்”

அதாவது, “இங்கு நிறைய தமிழ் மக்கள் இருப்பதால் தமிழிலேயே சொல்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு இளம் தலைவர் சனாதனம் தர்மம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் கூறினார்.

Also Read: மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. அதிகாலையிலேயே நடந்த பூமி பூஜை.. கலந்து கொண்ட ஆனந்த்!

இதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். இதை யார் சொல்லி இருந்தாரோ அவருக்கு ஒன்று சொல்லுகிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது. சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால், நீங்கள் அழிந்து போவீர்கள். ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் இருக்கிறது” என்று மறைமுகமாக உதயநிதியை விமர்சித்தார் பவன் கல்யாண்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தூய்மையை உறுதி செய்ய சனாதன தர்ம சான்றிதழை செயல்படுத்த வேண்டும். இந்தச் சான்றிதழ், கோவில் நடைமுறைகளின் புனிதத்தைப் பேணுவதாகவும், சமய மரபுகளைப் பாதுகாக்கும்.

உதயநிதியை விமர்சித்த பவன் கல்யாண்:

சனாதன தர்மத்தின் கொள்கைகளை பாதுகாக்கவும், நாடு முழுவதும் அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேசிய மற்றும் மாநில அளவில் சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட வேண்டும். சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும், அதன் நம்பிக்கைகளுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைத் தடுக்கவும் வலுவான தேசியச் சட்டம் தேவை.


இந்தச் சட்டம் உடனடியாக இயற்றப்பட்டு நாடு முழுவதும் ஒரே நிலையில் அமல்படுத்தப்பட வேண்டும். இந்தச் சட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும், இந்த வாரியம் மற்றும் அதன் செயல்பாடுகளை ஆதரிக்க ஆண்டு நிதி ஒதுக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும்,  ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சி ராகுல் காந்தி கூறினார். நீங்கள் இந்துக்களை காயப்படுத்திவிட்டு, பின்னர் அதிகாரத்திற்காக அவர்களின் வாக்குகளை தேடுகிறீர்களா? நீங்கள் மோடியை வெறுக்கலாம், எங்களை வெறுக்கலாம். ஆனால் ராமரை வெறுக்கத் துணியவில்லை” என்று பவன் கல்யாண் கூறினார்.

Also Read: நா.த.க., நிர்வாகிகள் விலகல்.. எந்த பிரச்னையும் இல்லை என கூலாக சொன்ன சீமான்!

கடந்த ஆண்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனம் பற்றி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பேசியது தேசிய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியது. “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றச்சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest News