Pawan Kalyan Deputy CM: பவன் கல்யானுக்கு துணை முதல்வர் பதவி.. ஆந்திர அமைச்சரவை இலாக்கா விவரம் வெளியானது!

சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், அமைச்சரவை இலாக்கா குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதன்படி, ஆந்தர துணை முதலமைச்சராகிறார் ஜனசேனா கட்சியின் பவன் கல்யாண். இவருக்கு பஞ்சாப் ராஜ் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற நீர் வழங்கல், சுற்றுச்சூழல், வனம், அறிவியில் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுத்துறை நிறுவனங்கள், மற்றவர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து இலாக்களும் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Pawan Kalyan Deputy CM: பவன் கல்யானுக்கு துணை முதல்வர் பதவி.. ஆந்திர அமைச்சரவை இலாக்கா விவரம் வெளியானது!

சந்திர பாபு நாயுடு - பவன் கல்யாண்

Updated On: 

14 Jun 2024 16:39 PM

துணை முதல்வரானார் பவன் கல்யான்: ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேசம் கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோல மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆந்திராவில் 21 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து, ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த 12ஆம் தேதி பதவியேற்றார். இவரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில், நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், அமைச்சரவை இலாக்கா குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளன.

இலாக்கா விவரம்:

இவருக்கு பஞ்சாப் ராஜ் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற நீர் வழங்கல், சுற்றுச்சூழல், வனம், அறிவியில் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசம் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுத்துறை நிறுவனங்கள், மற்றவர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து இலாக்களும் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயடுவின் மகன் நாரா லோகேஷ்க்கு மனித வள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தகவல் தொடர்புதுறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கிஞ்சராபு அச்சன்நாயுடுவுக்கு விவசாயம், கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு, மீன்வளம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. ரவீந்திராவுக்கு சுரங்கங்கள், புவியியல், கலால் வரி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் நாதெண்டல மனோகருக்கு உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்குரு நாராயணாவுக்கு நகராட்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைகள் ஒதுக்கப்படடுள்ளன.

உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியை அனிதா வாங்கலபுடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பையாவுல கேவுக்கு நிதி, திட்டமிடல், வணிக வரிகள், சட்டமன்ற விவகாரங்கள் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்வள மேம்பாட்டு துறைக்கு நிர்மலா ராமாநாயுடுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  நஸ்யம் முகமது பாரூக்கு சட்டம் மற்றும் நீதி, சிறுபான்யினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அனகனி சத்ய பிரசாத்துக்கு வருவாய், பதிவுத்துறை, முத்திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கந்துலா துர்கேஷ்க்கு சுற்றுலா, கலாச்சாரம், ஒளிப்பரப்புத்துறையும், கும்மாடி சந்தியா ராணிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனார்தன் ரெட்டிக்கு சாலைகள் மற்றும் கட்டிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Also Read: வயநாடு தொகுதியில் களம் இறங்குகிறாரா பிரியங்கா காந்தி? தேசிய அரசியலில் ட்விஸ்ட்!

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?