5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Accident: வாழை பட பாணியில் விபத்து.. மூட்டை அடியில் உயிரை விட்ட 7 தொழிலாளர்கள்!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள  டி நரசாபுரம் மண்டலம் பகுதியில் உள்ள பொர்ரம்பாளையம் என்ற இடத்திலிருந்து முந்திரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நிடதவொலு மண்டலத்தில் உள்ள தாடி மல்லா என்ற இடத்தை நோக்கி இன்று அதிகாலை மினி லாரி என்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் மூட்டைகளுடன் சேர்த்து 9 கூலி தொழிலாளிகளும் பயணப்பட்டு வந்தனர்.

Accident: வாழை பட பாணியில் விபத்து.. மூட்டை அடியில் உயிரை விட்ட 7 தொழிலாளர்கள்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 11 Sep 2024 16:49 PM

விபத்து சம்பவம்: ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள  டி நரசாபுரம் மண்டலம் பகுதியில் உள்ள பொர்ரம்பாளையம் என்ற இடத்திலிருந்து முந்திரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நிடதவொலு மண்டலத்தில் உள்ள தாடி மல்லா என்ற இடத்தை நோக்கி இன்று அதிகாலை மினி லாரி என்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் மூட்டைகளுடன் சேர்த்து 9 கூலி தொழிலாளிகளும் பயணப்பட்டு வந்தனர். இந்த மினி லாரி தேவாரப்பள்ளி மண்டலத்தில் உள்ள சின்னைகுடம் பகுதியில் வந்த போது வழியில் பள்ளம் ஒன்று இருந்ததை டிரைவர் கவனித்துள்ளார். உடனடியாக வண்டியை பள்ளத்தில் இறங்காமல் இருக்க திருப்பியபோது அது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக அதே பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த விளைநிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Also Read: Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்!

அதிகாலையில் நடந்த இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்தனர். உடனடியாக மினி லாரிக்குள் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் குறித்து அருகில் உள்ள ஏரேழு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் கிரேன் வாகனம் உதவியுடன் விபத்துக்குள்ளான மினி லாரியை விளை நிலத்திலிருந்து மீட்டனர். ஆனால் அந்த வாகனத்தில் பயணித்த 9 தொழிலாளர்களில் ஏழு பேர் முந்திரி மூட்டைகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: MTC Chennai: ஐடிஐ மாணவர்களே.. உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி வேண்டுமா?

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 7 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்வதற்காக கோவூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஏரேழு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விபத்து ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக ரயிலை கவிழ்க்க நடக்கும் சதி

கடந்த சில நாட்களாக ரயில்வே தண்டவாளத்தில் ரயிலை கவிழ்க்க தொடர்ச்சியாக சதி நடந்து வரும் சம்பவம் ரயில்வே துறையினருக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து ஹரியானாவின் திவானிக்கு காலிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் கான்பூர் அருகே சிவராஜ்பூர் என்ற இடத்திற்கு வந்தபோது தண்டவாளத்தில் சில பொருட்கள் இருப்பதை ரயில் டிரைவர் பார்த்துள்ளார். உடனடியாக சந்தேகப்பட்டு சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியுள்ளார்.  ஆனால் பிரேக் போடப்பட்ட ரயில் நேராக தண்டவாளத்தில் இருந்தால் சமையல் கேஸ் சிலிண்டர் மீது மோதியது. இதில் சிலிண்டர் தூக்கி வீசப்பட்ட நிலையில் அது வெடிக்காததால் பெரும் விபத்தானது தவிர்க்கப்பட்டது. கீழே இறங்கி சென்று பார்த்தபோது தான் அது தண்டவாளத்தை கவிழ்க்க நடந்த சதி என்பது தெரிந்தது.

Also Read: Tirunelveli: பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்த மாணவன்.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!

இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில்  உள்ள ரயில் வழித்தடத்தில் இரண்டு சிமெண்ட் சிலாப்புகள் வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க நிகழ்த்தப்பட்ட சதி  முறியடிக்கப்பட்டது. மேலும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் இட்டார்சி வழித்தடத்தில் குராம்கேடி என்ற இடத்தில் தண்டவாளத்தின் குறுக்கே டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக வந்த ரயில் ஓட்டுநர்  உடனடியாக சுதாரித்து ரயிலைப் பாதியிலேயே நிறுத்தினார்.

இப்படியான நிலையில் மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இன்று மிகப்பெரிய சிமெண்ட் பலகை வைத்து சரக்கு ரயில் கவிழ்க்க நடத்தப்பட்ட சதி டிரைவரின் முன்னெச்சரிக்கையால் தவிர்க்கப்பட்டது.  தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சம்பவங்கள் ரயில் பயணத்தின் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்விகளையும், அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Latest News