5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாஜகவா, I.N.D.I.A-வா? சந்திரபாபு நாயுடு அளித்த பரபரப்பு பதில்!

அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, தெலுங்குதேசம் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளான ஜனசேனை 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தெலுங்கு தேசம் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்க உள்ளார். இங்கு ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைத்தன.  மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைத்தன.

பாஜகவா, I.N.D.I.A-வா? சந்திரபாபு நாயுடு அளித்த பரபரப்பு பதில்!
சந்திரபாபு நாயுடு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Jun 2024 11:57 AM

பாஜகவா, I.N.D.I.A-வா? அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, தெலுங்குதேசம் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளான ஜனசேனை 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தெலுங்கு தேசம் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்க உள்ளார். இங்கு ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைத்தன.  மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைத்தன. மொத்தமுள்ள 25 இடங்களில் தெலுங்கு தேசம் 16, பாஜக 3, ஜனசேனை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில், விஜயவாடாவில்  செய்தியாளர்களை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு.

அப்போது அவர் பேசுகையில், ”வாக்காளர்களின் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆந்திராவில் அரசு நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. பல தூக்கமில்லா இரவுகள், கடுமையான நெருக்கடியை கடந்து வந்துள்ளேன்.  ஆந்திராவில் 55.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி 45%, ஓய்எஸ்ஆர் கட்சிக்கு 39% வாக்குகள் கிடைத்துள்ளன.  நெருக்கடியில் இருந்து மக்கள் என்னை காப்பாற்றியுள்ளனர்.  மாநிலத்தில் ஊடகங்கள் கூட தடுக்கப்பட்டன மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது சிஐடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேர்தல் முடிந்ததும், எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பு.

Also Read: தனிப் பெரும்பான்மையை தவறவிட்ட பாஜக.. மீண்டும் பிரதமராவாரா மோடி?

பாஜக கூட்டணி இன்று ஆலோசனை:

அரசியலில் ஏற்ற தாழ்வுகள் சகஜம். வரலாற்றில் பல அரசியில் கட்சிகள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இது ஒரு வரலாற்றுத் தேர்தல். வெளிநாடுகளில் வசித்து வரும் வாக்காளர்கள் கூட தங்களது சொந்த ஊருக்கு வந்து வாக்களித்தனர்.  நீங்கள் எப்போதும் செய்திகளை விரும்புகிறீர்கள். நான் அனுபவசாலி மற்றும் நான் இந்த நாட்டில் பல அரசியல் மாற்றங்களைக் கண்டுள்ளேன். நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறேன். இன்று நடைபெறும் என்டிஏ கூட்டத்திற்கு நான் செல்கிறேன். மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

2024 மக்களவைத் தேர்தலில் 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. I.N.D.I.A கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுளளது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும். ஆனால், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரை இழுக்க I.N.D.I.A கூட்டணி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று என்டிஏ கூட்டணி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்ய இது முக்கியமானதாக இருக்கும். யார் ஆட்சியை அமைக்கப்போகிறார்கள் என்று தீர்மானப்பதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமர் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

Also Read: பிரதமர் வேட்பாளர் யார்? ஒன்றுகூடும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்.. டெல்லியில் பரபர!

 

Latest News