Caste Census : ராகுல் காந்தியின் சாதி குறித்து பேசிய அனுராக் தாகூர்.. நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை.. நடந்தது என்ன?
Anurag Thakur Controversy | இன்று நாடாளுமன்றத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தியின் நேற்றைய உரைக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அனுராக் தாகூர், ராகுல் காந்தியின் சாதி என்ன என்பது யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்டவர், மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்பை கோருகிறார் என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தினமும் பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாஜகவை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தியின் நேற்றைய உரைக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அனுராக் தாகூர், ராகுல் காந்தியின் சாதி என்ன என்பது யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்டவர், மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்பை கோருகிறார் என்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதால் அவமானப்படுத்தப்படுகிறேன் – ராகுல் காந்தி
இதனால் மக்களவையில் கடும் அமளி எழுந்தது. அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு பதிலளித்து பேசிய ராகுக் காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பேசுவதால் தான் அவமானப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.இந்த நாட்டில் யார் தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் அனைவரும் அவமானப்படுத்தடுவார்கள் என்று கூறினார். மகாபாரதத்தில் அர்ஜூன் எப்படி மீனின் கண்ணை மட்டும் பார்த்தாரோ, அதேபோல நான் சாதிவாரி கணக்கெடுப்பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றேன். எப்படியாயினும் அது நடந்தே தீர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள், நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : Wayanad Landslide : 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
பூதாகரமாக வெடித்த சர்ச்சை
ராகுல் காந்தியை அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக தான் அவமானங்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ள நிலையில், தனக்கு யாருடைய வருத்தமும் தேவையில்லை என்று தெரிவித்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இது குறித்து பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பெயரால் தான் அனுராக் தாகூர் இப்படி பேசினாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
Leader of Opposition Rahul Gandhi ji Best reply BJP MP Anurag Thakur 🔥🫡💪🫡🫡🫡🫡
Best Lok sabha Reply 🔥💪
Please Congressi Retweet 🔄 Maximum 🙏 pic.twitter.com/kwL1DgZGXv
— Ashish Singh (@AshishSinghKiJi) July 30, 2024
சரமாரி கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நேற்று நாடாளுமன்றத்தி சரமாரி கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, “பட்ஜெட் தயாரித்த குழுவில் எத்தனை பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்?, பழங்குடியினர் எத்தனை பேர் உள்ளனர்?, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர்?, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் எத்தனை பேர் உள்ளனர்? இதற்காக தான் சாதிவாரி கணக்கெடுப்பை கோருகிறோம்” என்றார்.