5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Arunachal Sikkim Results: சிக்கிமில் பிராந்திய கட்சி வெற்றி.. அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி!

Arunachal Sikkim Results: வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில், சிக்கிமில் 31 தொகுதிகளில் அபார வெற்றி பெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சிக்கிமில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆட்சியை தக்க வைத்ததன் மூலம் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் 45 தொகுதிகளை கைப்பற்றி பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதலமைச்சராக பெமா காண்டு மீண்டும் பதவியேற்பார்.

Arunachal Sikkim Results: சிக்கிமில் பிராந்திய கட்சி வெற்றி.. அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி!
சிக்கிம், அருணாச்சல சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 Jun 2024 10:53 AM

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்: வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது. இதனுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் ஜூன் 2ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு மாநில சட்டமன்ற பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதியுடன் முடிவடைவதால், முன்கூட்டியே இந்த மாநிலங்களுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.

Also Read: குஜராத் மக்களவைத் தொகுதி முடிவுகள்.. கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!

சிக்கிம், அருணாச்சல பிரதேசம்:

32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிமில் பிரேம்சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. இந்த தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன. 32 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 17 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.  அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. 60 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.  இங்கு பிரதான கட்சிகளாக பாஜக, காங்கிரஸ் உள்ளது. இதில் பார்க்க வேண்டியது இங்குள்ள 60 இடங்களில் பாஜக ஏற்கனவே 10 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டது. இந்த 10 தொகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதனால், பாஜக 10 தொகுதிகளில் போட்டியின்றி வென்றது. இதனால் கடந்த ஏப்ரல் 19ல் 50 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது.

முன்னிலை வகிக்கும் கட்சிகள்:

மேற்கண்ட இரண்டு மாநிலங்களிலும் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இறுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி ஒரு தொகுதியில் வென்றுள்ளது. இதன் மூலம் 31 தொகுதிகளில் அபார வெற்றி பெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சிக்கிமில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆட்சியை தக்க வைத்ததன் மூலம் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியனர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஏற்கனவே 10 இடங்களில் வென்றிருந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இறுதியில் ஆளும் பாஜக 45 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேசிய மக்கள் கட்சி 6 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அருணாச்சல பிரதேசத்தில் 45 தொகுதிகளை கைப்பற்றி பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதலமைச்சராக பெமா காண்டு மீண்டும் பதவியேற்பார்.

Also Read: ஹாட்ரிக்கை நோக்கி மோடி.. கணித்து சொன்ன எக்ஸிட் போல்!

Latest News