ஸ்வாதி மாலிவால் விவகாரம்.. கெஜ்ரிவால் உதவியாளருக்கு சம்மன்.. 10 முக்கிய நிகழ்வுகள்!

Swati Maliwal: டெல்லி காவல்துறையின் இருவர் கொண்ட குழு, மத்திய டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் இல்லத்தில் வியாழக்கிழமை (மே 16,2024) அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. முதலமைச்சரின் இல்லத்தில் நடந்த சம்பவம் குறித்து மாலிவால் காவல்துறையிடம் கூறினார். மாலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் மூலம், இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.

ஸ்வாதி மாலிவால் விவகாரம்.. கெஜ்ரிவால் உதவியாளருக்கு சம்மன்.. 10 முக்கிய நிகழ்வுகள்!

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால்.

Updated On: 

17 May 2024 12:53 PM

ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் :  ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால், டெல்லி காவல்துறையிடம் தனது வாக்குமூலத்தை அளித்தார். இந்த நிலையில், அவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்த எஃப்ஐஆர் பற்றிய விவரங்கள் வெளிவந்தன. அண்மையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடந்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளர் பிபவ் குமார் நடத்தியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஸ்வாதி மாலிவால் தனது புகாரில், முதலமைச்சர் இல்லத்தில் பிபவ் தன்னை அறைந்து, வயிற்றில் உதைத்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.மேலும், ஐ.பி.சி பிரிவுகள் 354, 506, 509, மற்றும் 323 ஆகிய பிரிவுகளின் கீழ், அவமதிப்பு மற்றும் தாக்குதல், கிரிமினல் மிரட்டல், தவறான வார்த்தை பிரயோகம் மற்றும் உள்நோக்கத்துடன் தவறிழைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் கெஜ்ரிவால் சிறைக்கு செல்வாரா? உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சிக்கு ஸ்வாதி மாலிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஸ்வாதி மாலிவால், “எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. எனக்கு நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். கடந்த நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தன.

பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன். கேரக்டர் படுகொலையில் ஈடுபட முயற்சித்தவர்களையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இப்போது முக்கியமான தேர்தல்கள் நடக்கின்றன என்று கூறிய அவர், தான் முக்கியமல்ல, ஆனால் நாட்டின் பிரச்சினைகளே முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்தச் சம்பத்தின் 10 முக்கிய நிகழ்வுகள்

  1. டெல்லி முதலமைச்சர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நெருங்கிய உதவியாளர் குமார் தாக்குதலில் ஈடுபட்டார் என ஸ்வாதி மாலிவால் புகார் அளித்துள்ளார்.
  2. ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரில் குமார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கபபட்டுள்ளார்.
  3. ஸ்வாதி மாலிவாலிடம் அவரத இல்லத்தில் போலீஸ் அதிகாரி கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினார்.
  4. இந்த விவகாரத்தில் அரசியலில் ஈடுபட வேண்டாம் என பா.ஜ.க.வினருக்கு ஸ்வாதி மாலிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  5. “கடந்த காலங்கள் மிக மோசமாக இருந்தன; எனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி” என ஸ்வாதி மாலிவால் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவு.
  6. இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மௌமாக இருப்பதாக பா.ஜ.க. விமர்சித்துள்ளது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டீயா, “இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி அரவிந்த் கெஜ்ரிவால்” என்றார்.
  7. “அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரம் குறித்த பேச வேண்டும். அவர் சிறையில் இருந்து வெளியேறிய பின்பு மூர்க்கத்தனமாக நடந்துக்கொள்கிறார்” -பா.ஜ.க.
  8. ஸ்வாதி மாலிவாலிடம் குமார் தவறாக நடந்துக் கொண்டதை ஆம் ஆத்மியின் மற்றொரு எம்.பி. சஞ்சய் சிங் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
  9. இந்த விவகாரத்தில் கட்சி ரீதியாக குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
    தேசிய பெண்கள் ஆணையமும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
  10. குமார் மீது பல்வேறு கிரிமினல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கணவரை கடைசியாக பார்க்க முடியாத சோகம்.. விமான ஸ்டிரைக்கால் மனைவிக்கு நடந்த சோகம்

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!