5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Arvind Kejriwal: ”மோடிக்காக பரப்புரை செய்ய தயார்” திடீரென ரூட்டை மாற்றும் அரவிந்த கெஜ்ரிவால்

டெல்லியில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்கிறது. பிப்ரவரியில் டெல்லியில் தேர்தல் நடப்பதற்கு முன் பாஜக ஆளும் 22 மாநிலங்களில் பிரதமர் மோடி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதை அவர் செய்தால் நான் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Arvind Kejriwal: ”மோடிக்காக பரப்புரை செய்ய தயார்”  திடீரென ரூட்டை மாற்றும் அரவிந்த கெஜ்ரிவால்
கெஜ்ரிவால் – மோடி (picture credit: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 Oct 2024 16:16 PM

டெல்லியில் உள்ள சதர்சல் ஸ்டேடியத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக இன்று நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்ட உரையாற்றினார். அப்போது பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “நேற்று ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் இரட்டை இயந்திர ஆட்சி நடக்கிறது. நாட்டில் இரட்டை இயந்திரம் பழுதடைந்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முதல் இயந்திரம் தோல்வியடைந்தது. இரண்டாவது ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து இயந்திரம் தோல்வியடையும்.

”மோடிக்காக பரப்புரை செய்ய தயார்”

இரட்டை இயந்திரம் அரசாங்கம் என்பது பணவீக்கம், வேலையின்மை மற்றும் ஊழல் என்பதை மக்கள் புரிந்துகொண்டனர்.  90களில் மும்பையில் பாதாள ஆட்சி இருந்ததாகக் கேள்விப்பட்டிருப்போம். டெல்லியிலும் அதுதான் நடந்திருக்கிறது. டெல்லி போலீசார் அவர்களுடன் இருக்கிறார்கள்.

பாஜக என்ன செய்தது? டெல்லி அரசின் வேலையை நிறுத்துவதில் மட்டும் மும்முரமாக இருக்கிறது பாஜக.  டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீரகெட்டு உள்ளதுபிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் எதுவும் செய்யவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள்.

Also Read: ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு ஷாக்.. திரும்பி அடிக்கும் காங்கிரஸ்.. Exit poll சொல்வது என்ன?

அவர் ஓய்வு பெறும்போது, ​​அவர் ஒன்றும் செய்யவில்லை என்று மக்கள் நினைப்பார்கள். பிரதமர் மோடி தனது 10 ஆண்டுகால ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். எனவே அவர் இப்போது எதாவது செய்தால் மக்கள் அதை நினைவு கூறுவார்கள்.

“சிறையில் என் உயிரே போயிருக்கும்”

22 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது என்று நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால் மின்சாரம், தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறதா? குஜராத்தில் 30 ஆண்டுகளாக பாஜக அரசு உள்ளது. அங்கு ஒரே மாதிரியான பள்ளிகள் இல்லை.  டெல்லியில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்கிறது.

பிப்ரவரியில் டெல்லியில் தேர்தல் நடப்பதற்கு முன் பாஜக ஆளும் 22 மாநிலங்களில் பிரதமர் மோடி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதை அவர் செய்தால் நான் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “டெல்லி போன்று பாஜக ஆளும் மாநிலங்களில் எதுவும் கிடையாது. டெல்லியை பாஜக அழித்துவிட்டது. பாஜக ஏழைகளுக்கு எதிரானது. பலருடைய வேலைகளை பறித்தார். பெண்களின் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் மார்ஷல்களை நியமித்தேன். இங்கு சாமானியர்கள் வாழ்வதே சிரமமாக உள்ளது.

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்தை உறுதி செய்வேன்.நான் சிறையில் இருந்தபோது எனக்கு இன்சுலின் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். அதனால் என் சிறுநீரகம் செயலிழந்திருந்தால். என் உயிரே போயிருக்கும்” என்று கூறினார் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்:

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து, அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேர்தல் வரும் வரை அதிஷி முதல்வராக தொடர்வார். இந்தநிலையல், டெல்லியில் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும். கடைசியாக 2020ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் 62 தொகுதிகளை ஆம் ஆத்தி கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. அதேபோல, பாஜக படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து ஆறு சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜக தோல்வி அடைந்துள்ள நிலையில், இந்த முறை ஆட்சியை பிடிப்பதற்கு முனைப்பு காட்டி வருகிறது.

Also Read: சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்.. மம்தாவுக்கு மீண்டும் நெருக்கடி!

அதேபோல, ஆம் ஆத்மியும் ஆட்சியை தக்க வைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், பாஜக யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Latest News