5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாட்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில், கெஜ்ரிவாலின் ஜாமீன் அவகாசம் இன்னும் 5 நாட்களுக்குள் முடிவடைய உள்ளது. ஜூன் 2ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்!
அரவிந்த் கெஜ்ரிவால்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 May 2024 10:55 AM

உச்ச நீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்தத் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி மே 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாட்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி என்றும், முதலமைச்சராக அலுவலல் பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது. இந்தநிலையில், கெஜ்ரிவாலின் ஜாமீன் அவகாசம் இன்னும் 5 நாட்களுக்குள் முடிவடைய உள்ளது. ஜூன் 2ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. தனது உடல்நிலையை பரிசோதனை செய்ய இருப்பதால் ஏழு நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? பிரசாந்த் கிஷோர் நறுக்!

வழக்கின் பின்னணி:

டெல்லி அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான மதுபான கொள்கை வகுத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது பின்னர் பீகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் அடுத்து தடுத்து நீடிக்கப்பட்டது.

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவரது கைது நடவடிக்கையில் சட்டவிதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று தெரிவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அவரது தரப்பில் கோரப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தேதி குறித்த I.N.D.I.A கூட்டணி.. தேர்தல் முடிவு முன்பே எதிர்க்கட்சிகள் ஸ்கெட்ச்!

Latest News