5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகள்.. 18 பேரின் தலைமுடியை வெட்டிய பள்ளி முதல்வர்..

கார்த்திகை பௌர்ணமி தினமான நவம்பர் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை நீராட தண்ணீர் கிடைக்காத காரணத்தால், பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் காலை தாமதமாக ப்ரேயரில் கலந்து கொண்டனர். 23 மாணவிகளும் வராததைக் கண்டு முதல்வர் சாய்பிரசன்னா கோபத்தை வெளிப்படுத்தினார்.

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகள்.. 18 பேரின் தலைமுடியை வெட்டிய பள்ளி முதல்வர்..
பள்ளி மாணவிகளின் முடியை வெட்டிய விவகாரம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2024 19:50 PM

ஆந்திரா மாநிலத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை, பள்ளி முதல்வர் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கம் என்ற பெயரில், அல்லூரி சீத்தாராமராஜு மாவட்டத்தில் உள்ள பள்ளி நிர்வாகம் இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தை செய்துள்ளது. பள்ளியில் காலை prayer -க்குஉரிய நேரத்தில் வராததால் சிறுமிகளின் தலைமுடியை முதல்வர் வெட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் ஜி.மதுகுலாவில் உள்ள கஸ்தூர்பா பெண்கள் வித்யாலயாவில் (கேஜிபிவி) இந்த சம்பவம் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது. பள்ளியில் பயிலும் மாணவிகளின் தலைமுடியை முதல்வர் வெட்டிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

கார்த்திகை பௌர்ணமி தினமான நவம்பர் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை நீராட தண்ணீர் கிடைக்காத காரணத்தால், பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் காலை தாமதமாக ப்ரேயரில் கலந்து கொண்டனர். 23 மாணவிகளும் வராததைக் கண்டு முதல்வர் சாய்பிரசன்னா கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் பள்ளி வளாகத்தில் 23 மாணவிகளும்2 மணி நேரம் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

Also Read: ரயில் உணவை சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழப்பா? – நடந்தது என்ன?

அதில் ஒருவர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அதே சமயம் 4 மாணவிகளை கை நீட்டி அடுத்துள்ளார் பள்ளி முதல்வர். இதிலும் ஆத்திரம் அடங்காத பள்ளி முதல்வர் மதிய உணவு இடைவேளையில் 18 மாணவிகளில் முடியை வெட்டியுள்ளார். தலைமுடியை வெட்ட வேண்டாம் என்றும் சொல்லிப்பார்த்தும், அதனை சற்றும் பொருட்படுத்தாமல் முடியை வெட்டியுள்ளார்.

மாணவிகளின் முடியை வெட்டிய விவகாரம்:

வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோருக்குத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக்கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். மேலும் இது போன்ற செயலை எப்படி செய்யலாம் என்றும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

Also Read: முழுக்க முழுக்க இந்திக்கு மாறிய LIC இணையதளம்.. பொதுமக்கள் எதிர்ப்பு!

மாணவிகள் முடி வெட்டியது குறித்து கேஜிபிவி முதல்வர் சாய் பிரசன்னாவிடம் விளக்கம் கேட்டபோது, ​​நவம்பர் 15ம் தேதி மாணவிகள் ப்ரேயர் மற்றும் வகுப்புகளுக்கு கூட வரவில்லை என்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதற்காக தலைமுடியை கொஞ்சமாக வெட்டிக்கொண்டதாக அவர் கூறினார். மேலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முடியை வெட்டியதாகவும், அவர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் சாய்பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்இஓ பாபுராவ் படாலிடம் விளக்கம் கேட்கப்பட்டது தலைமை ஆசிரியர் கேஜிபிவியை பார்வையிட சென்றபோது பள்ளி முதல்வர் விடுமுறையில் இருந்தார் என்றும் மாவட்ட கல்வித்துறை மற்றும் ஜிசிடிஓவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் மாணவிகளுக்கு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் கூட இது போன்ற அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரத்தநாடு அருகெ அய்யம்பட்டி பள்ளியில் மாணவர்கள் பேசியதற்காக வாயில் செல்லோடேப் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டப்போது, வகுப்பறையில் ஆசிரியர் யாரும் இல்லாததால் மாணவர்கள் பேசாமல் இருக்க சக மாணவர் இந்த செயலை செய்ததாகவும், அந்த வழியாக சென்றப்போது இதனை கண்டு உடனடியாக மாணவர்களின் வாயில் இருக்கும் செல்லோடேப்பை உடனடியாக அகற்றி விட்டாதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

Latest News