Kerala Swine Flu: கேரளாவில் பரவும் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்.. பன்றிகளை அழிக்க உத்தரவு..!
திருச்சூர் அல்லது பிற பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சி கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்கள் மற்றும் பிற நுழைவுப் புள்ளிகளிலும் கால்நடை பராமரிப்புத் துறையினர் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மடக்கத்தாரை ஊராட்சியில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் பரவும் பன்றிக்காய்ச்சல்: கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மடக்கத்தாரா 14வது வார்டில் உள்ள ஒரு தனியார் பண்ணையில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் காரணமாக சுமார் 310 பன்றிகள் அழிக்கப்பட உள்ளன. வெளியந்தரையைச் சேர்ந்த குட்டலப்புழா பாபு என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த தனியார் பண்ணையில் இரண்டு பன்றிகள் உயிரிழந்தது. பின்னர் பரிசோதனை மேற்கொண்ட போது பன்றிகளுக்கு ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதை தொடர்ந்து திருச்சூர் மாவட்ட ஆட்சியர் பன்றிகளை கொன்று புதைக்க மாவட்ட கால்நடை அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய குழு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் முதன்மை கிருமிநாசினி நடவடிக்கைகளும் (primary disinfection measures) எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
பாதிக்கப்பட்ட பண்ணையில் இருந்து 1 கிமீ சுற்றளவு வரை உள்ள பகுதி, நோயால் பாதிக்கப்பட்ட பகுதியாகவும், 10 கிமீ சுற்றளவில் உள்ள பகுதி நோய் கண்காணிப்பு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பன்றி இறைச்சியை கொண்டு செல்வது, அத்தகைய பண்ணைகளை இயக்குவது, பன்றிகள் நடமாட்டம், பன்றி இறைச்சி மற்றும் தீவனங்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வது போன்ற நடவடிக்கைகள் மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் பாதிக்கப்பட்ட பண்ணையில் இருந்து வேறு பண்ணைகளுக்கு பன்றிகள் கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்தும் கால்நடை பராமரிப்புத் துறையினர் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சூர் அல்லது பிற பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சி கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்கள் மற்றும் பிற நுழைவுப் புள்ளிகளிலும் கால்நடை பராமரிப்புத் துறையினர் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மடக்கத்தாரை ஊராட்சியில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் அவ்வப்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக பண்ணையில் இருக்கும் கோழிகள் மற்றும் வாத்துக்கள் கொத்து கொத்தாக அழிக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் பரவியுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read: T20 உலக கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் கவனம் ஈர்த்த இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா?