5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Assam : அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த ஹிமந்த பிஸ்வா சர்மா!

Beef | அசாம் மாநிலத்தில் இன்று (04.12.2024) முதல் எந்த வகையிலும், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனக்கள் மாட்டிறைச்சியை பயன்படுத்தவோ, சாப்பிடவோ கூடாது என்று அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Assam : அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
ஹிமந்த பிஸ்வா சர்மா
vinalin
Vinalin Sweety | Updated On: 04 Dec 2024 21:10 PM

அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கோயில்களுக்கு அருகில் மட்டும் மாட்டிறைச்சி பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த சட்டத்தில் மாற்றம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது மாட்டிறைச்சிக்கான தடை மாநிலம் முழுவதும் அமல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஹிமந்த பிஸ்வா சர்மாவின் இந்த அதிரடி அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது இன்று (04.12.2024) முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய நடவடிக்கை மற்றும் அதன் கட்டுப்படுகள் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : CM MK Stalin : வானிலை கணிப்புகளை விட அதிக அளவு பெய்த மழை.. புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்!

உலக அளவில் அதிக அளவு உட்கொள்ளப்படும் மாட்டிறைச்சி

உலக அளவில் அதிக மக்களால் உட்கொள்ளப்படும் பிரதான உணவாக மாட்டிறைச்சி உள்ளது. ஆனால் இந்தியாவில் மாட்டிறைச்சி உட்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. காரணம், இந்தியாவில் மாட்டிறைச்சி இறைச்சியாக பார்க்கப்படுவது அல்லாமல் அரசியலாக, மத உண்வாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாட்டிறைச்சி உட்கொண்டதற்காக கொலைகளும் அரங்கேறியுள்ளன. இவ்வாறு மாட்டிறைச்சி உட்கொள்வது இந்தியாவில் ஒரு மாபெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ISRO : கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரச்னை.. தடுத்து நிறுத்தப்பட்ட ராக்கெட்.. இஸ்ரோவில் பரபரப்பு சம்பவம்!

அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்த அரசு

அசாம் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 15 வது முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அசாமில் கோயில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி உண்பதற்கும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அசாமில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கான விதிகளில் மாற்றம் செய்து புதிய விதிகளை இணைக்க அம்மாநில அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்தது. இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அசாமில் மாட்டிறைச்சி உட்கொள்ள, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Kerala : திருமணத்தை மீறிய உறவு.. ஆண் நண்பருடன் காரில் வைத்து மனைவியை எரித்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

மாட்டிறைச்சி தடை குறித்தி விளக்கமளித்த முதலமைச்சர்

அசாம் மாநிலத்தில் கோயில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி உட்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த தடை அந்த மாநிலம் முழுவது விரிவு படுத்தப்பட்டுள்ளது அந்த மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அசாம் மாநிலத்தில் இனி எந்த உணவகத்திலும், பொது வெளிகளிலும் மாட்டிறைச்சி வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, எந்த ஒரு பொது விழாக்களின் போதும், பொது நிகழ்வுகளின் போதும் மாட்டிறைச்சி வழங்கப்படாது என்று முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், முன்னதாக கோயில்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை விதிக்க முடிவு செய்து இருந்தோம். ஆனால், தற்போது அசாமின் அனைத்து இடத்திலும், உணவகங்களிலும், பொது நிகவுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் உட்கொள்வதற்கு தடையை விரிவுப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News