Aadhaar Card: இனி இந்த ஆவணம் இருந்தால் தான் ஆதார் கார்டு.. வந்தது மேஜர் அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதாருக்கு செக் வைத்த அரசு: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, அசாம் மாநிலத்தில் புதிய ஆதார் கார்டு பெறுவதற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு விண்ணப்ப எண்கள் கட்டாயம் என்று அம்மாநில முதல்வர் ஹமந்தா பிஸ்வா சர்மா அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அசாம் மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையைவிட அதார் அட்டை விண்ணப்பங்கள் அதிகமாக உள்ளன.
இது அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகளவில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, ஆதார் அட்டைக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் தங்களின் என்.ஆர்.சி விண்ணப்பத்துக்கான ரசீது எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த புதிய நடவடிக்கை மாநிலத்திற்கு சட்டவிரோதமாக வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும். இனி ஆதார் அட்டை வழங்குவதில் அரசு கவமான இருக்கும்.
Also Read: ஆந்திராவை அதிரவைத்த சீரியல் கில்லர்கள்.. சயனைடு கலந்து 4 பேரை கொன்ற பெண்கள்.. பகீர் பின்னணி!
காரணம் என்ன?
ஆதார் அட்டை பெற கடுமையாக்கி உள்ளோம். என்ஆர்சி செயல்முறையில் பயோமெட்ரிக் பதிவு செய்யப்பட்ட 9.56 லட்சம் பேர் ஆதாருக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஏற்கனவே ஆதார் வைத்திருப்பவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை” என்றார். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானனோர் குடியேறி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு எண்களை கட்டாயப்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதோடு, இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழலில், அசாம் மாநிலத்தில் புதிய ஆதார் கார்டு பெறுவதற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு விண்ணப்ப எண்கள் கட்டாயம் என்று அம்மாநில முதல்வர் ஹமந்தா பிஸ்வா சர்மா அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மாநிலத்தில் சட்டவிரோத வெளிநாட்டிர் வருகையை தடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் இந்த நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: திடீரென இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்.. 8 பேர் பலியான சோகம்!
ஜனவரி 2024ஆம் ஆண்டு முதல் இன்று வரை மொத்தம் 54 பேர் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 48 பேரும், போங்கைகான் மாவட்டத்தில் நான்கு, திமா ஹசாவ் மற்றும் துப்ரி மாவட்டங்களில் தலா ஒருவர், இதில், 45 பேர் சொந்த நாட்டிற்குத் தள்ளப்பட்டனர், ஒன்பது பேர் கரீம்கஞ்சில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.