5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Assam: அசாமில் பயங்கரம்.. தன்னை கண்டித்த ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன்..!

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேதியியல் பாட ஆசிரியராக பருவா பெஜாவாடா (55) என்பவர் 16 வயதான பிளஸ் 1 மாணவனை சரியாக படிக்காததற்கும், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்கும் திட்டி உள்ளார். பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து கோபமடைந்த அந்த மாணவன், பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை தலையில் குத்தினார் அதில் படுகாயமடைந்த ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

Assam: அசாமில் பயங்கரம்.. தன்னை கண்டித்த ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன்..!
உயிரிழந்த ஆசிரியர்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 08 Jul 2024 10:16 AM

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்: அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறைக்குள் தனது ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, ஒரு தனியார் பள்ளி வகுப்பறைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது, அந்த மாணவன் சரியாக படிக்காததை காரணம் காட்டி ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. அந்த மையத்தில் இருக்கும் பிற பேராசிரியர்கள் வெளியேறிய பிறகு அந்த மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேதியியல் பாட ஆசிரியராக பருவா பெஜாவாடா (55) என்பவர் 16 வயதான பிளஸ் 1 மாணவனை சரியாக படிக்காததற்கும், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்கும் திட்டி உள்ளார். பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளார்.


பிறகு மதியம் அந்த மாணவன் பள்ளிச்சீருடை அணியாமல் வகுப்புக்கு சாதாரண உடையில் வந்துள்ளார். இதனை பருவா பெஜாவாடா கண்டித்து, வெளியே செல்லும்படி கூறி உள்ளார். இதனையடுத்து கோபமடைந்த அந்த மாணவன், பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை தலையில் குத்தினார். அதில் படுகாயமடைந்த ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read:  3 நாள் வெளிநாட்டு பயணம்.. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை.. முழு விவரம்..

குற்றம்சாட்டப்பட்ட மாணவரின் வகுப்பு தோழர்களில் ஒருவரின் கூற்றுப்படி, அந்த மாணவரை ஆசிரியர் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் அந்த மாணவன் வகுப்பறை விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வகுப்பறைக்கு வந்த மாணவனை மீண்டும் அந்த ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் அந்த ஆசிரியரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஆசிரியரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த தாக்குதலுக்கான சரியான காரணம் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: சாம்பியன் டிராபி தொடரில் கேப்டனாக ரோகித் ஷர்மா தொடர்வார்- பிசிசிஐ செயலாளர்

Latest News