Assembly By Election 2024: 7 மாநிலங்கள்.. 13 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்.. கவனம் ஈர்க்கும் ஹிமாச்சல் ஏன்? - Tamil News | | TV9 Tamil

Assembly By Election 2024: 7 மாநிலங்கள்.. 13 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்.. கவனம் ஈர்க்கும் ஹிமாச்சல் ஏன்?

இடைத்தேர்தல் 2024: இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மரணம், ராஜினாமா உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Assembly By Election 2024: 7 மாநிலங்கள்.. 13 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்.. கவனம் ஈர்க்கும் ஹிமாச்சல் ஏன்?

நாளை இடைத்தேர்தல்

Updated On: 

10 Jul 2024 08:22 AM

13 தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல்: பரப்பான சூழ்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 276 வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமில்லாமல், மேலும் 6 மாநிலங்களில் உள்ள 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதாவது இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மரணம், ராஜினாமா உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ரெய்கன்ஜ், ரனாகெட்தட்சின், பாக்தாக், மணித்தலா ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்கள் மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். அதேபோல, திரிணாமுல் தலைவர் சதன் பாண்டே உயிரிழந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Also Read: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..

ஹிமாச்சல பிரதேசம்:

ஹிமாச்சல பிரதேசத்தில் தேரா, ஹமீர்பூர், நலகரா ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் களமிறங்கி உள்ளனர். இதில் தேரா தொகுதியில் இமாச்சல பிரதேச முதல்வர் சுபீந்தர் சிங் சுகுவின் மனைவி கம்லேஷ் தாக்கூர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் கோசியாரிசின் போட்டியிடுகிறார். இமாச்சலில் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருக்கும் போதிலும், மூன்று தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆட்சி அமைக்க தேவையான 35 எம்எல்ஏக்களும் ஆதரவு இருக்கும்போதிலும், மாநிலத்தில் பலமான எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஆளும் திமுக, பாமக, நாதக ஆகியோர் களத்தில் உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாமக வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக உள்ள சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

உத்தரகண்ட்:

உத்தரகண்டில் பத்ரிநாத், மக்களூர் ஆகிய தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. பத்ரிநாத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த ராஜேந்திர பண்டாரி கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். அதேபோல, மக்களூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் சர்வத் கரீம் அன்சாரி கடந்த அக்டோபரில் மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற தொகுதிகள்:

பீகார், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. பீகாரில் ரூபாலியில் இடைத்தேர்தல் நடக்கிறது. ஜேடியு கட்சி எம்எல்ஏ பீமா பார்தி மக்களவை தேர்தலுக்கு முன்பு ஆர்ஜேடி கட்சியில் இணைந்தார். அதேபோல, பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த ஷீத்தல் அங்கூரல் பாஜகவில் இணைந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  அங்கு காங்கிரஸ், ஆளும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Also Read: 2.5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு பிஎஃப் செலுத்தாத ஸ்பைஸ்ஜெட்.. RTI மூலம் வெளியான உண்மை!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!